அரசியல்

குஜராத்தை தொடர்ந்து மும்பை... வேலை தேடி வீதி வீதியாக திண்டாடும் பட்டதாரிகள்... பாஜக ஆட்சியின் அவலம்!

குஜராத்தை தொடர்ந்து மும்பை... வேலை தேடி வீதி வீதியாக திண்டாடும் பட்டதாரிகள்... பாஜக ஆட்சியின் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒன்றிய பாஜக ஆட்சியில் மக்கள் பல துன்பங்களை அனுபவித்தது வருகின்றனர். விலையேற்றம், வேலையில்லா திண்டாட்டம் என அனைத்தும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் மக்கள் விரோதமான பல்வேறு சட்டங்களையும் ஏற்றி, பல இன்னல்களுக்கு தள்ளியுள்ளது. அதோடு, மக்கள் மத்தியில் மதம் சார்ந்த வெறுப்பு பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே நாட்டுக்கு எந்தவொரு நல்லதும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் மக்கள் நலனுக்கு பதிலாக பெரிய தொழிலதிபர்களின் நலன்களையே பேணி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் விலைவாசி உயர்வு மட்டுமின்றி வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

குஜராத்தை தொடர்ந்து மும்பை... வேலை தேடி வீதி வீதியாக திண்டாடும் பட்டதாரிகள்... பாஜக ஆட்சியின் அவலம்!

இதனை எதிர்க்கட்சிகள் மக்கள் என அனைவரும் கேள்வி எழுப்பி வரும் நிலையிலும், இதனை கண்டுகொள்ளாமல் ஒன்றிய பாஜக அரசு இருந்து வருகிறது. நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை ஆண்டுதோறும் அதிகரித்தே காணப்படுகிறது. இதுகுறித்து பேசச்சொன்னால், படித்தவர்களும் பக்கோடா விற்றுக் கூட பிழைக்கலாம் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இவ்வாறு வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துக் காணப்படும் நிலையில், தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் காலியான பணியிடங்களுக்கு நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க கூட்டம் அலைமோதியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மும்பை ஏர் இந்தியா நிறுவனத்தின் நேர்காணல்
மும்பை ஏர் இந்தியா நிறுவனத்தின் நேர்காணல்

பாஜக கூட்டணி ஆளும் மகாரஷ்டிரா மாநிலம் மும்பையின் காலினா பகுதியில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் நேர்காணல் நேற்று (ஜூலை 16) நடைபெற்றது. சுமார் 2,216 காலியான பணியிடங்களுக்கு நடைபெற்ற நேர்காணலை அறிந்த படித்த பட்டடாரி இளைஞர்கள் பலரும் இதில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.

அதன்படி அந்த நேர்காணலுக்கு ஏறக்குறைய 25,000-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நேர்காணலில் கலந்துகொள்ள வருகை புரிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கடும் பாதிப்பு ஏற்பட்டதால், விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பெட்டியில் போட்டுவிட்டு செல்லுமாறும், அதனை பார்த்து தொடர்பு கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டதையடுத்து கூட்டம் கலைந்து சென்றது.

குஜராத்
குஜராத்

இதே போல் கடந்த ஜூலை 11-ம் தேதி பாஜக ஆளும் குஜராத்தின் பரூச் பகுதியில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற கெமிக்கல் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்கள் கலந்துகொண்டதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் இளைஞர்கள் முண்டியடித்து செல்ல முயற்சி செய்த நிலையில், பலருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குஜராத் நேர்காணல் தொடர்பான வீடியோ வெளியாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோவுக்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதுதான் பாஜக ஆட்சியின் லட்சணம் என்றும், இது போன்ற அவலநிலைக்கு பாஜக பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories