அரசியல்

இது தான் மோடி கூறும் வளர்ச்சியா? : சஞ்சய் ராவத் கேள்வி!

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியா வளர்ச்சி பெறுகிறது என்ற மோடியின் பேச்சின் உள் ஒலிந்திருக்கும் உண்மை இது தானா? - குஜராத்தில் வெளிப்பட்ட உண்மை.

இது தான் மோடி கூறும் வளர்ச்சியா? : சஞ்சய் ராவத் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றியத்தில் 2014 முதலும், குஜராத்தில் 1995 முதலும் பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. எனவே, பா.ஜ.க.வை பொறுத்தவரை குஜராத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சியின் அடுத்தகட்டமாகவே, ஒன்றிய ஆட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அமைக்கப்பட்ட, அந்த அடுத்தகட்ட ஆட்சியில் வளர்ச்சி இருக்கிறதா? என்றால், இருக்கிறது. வேலைவாய்ப்பின்மையிலும், வறுமையிலும், சாதி - மத பாகுபாட்டிலும் கண்டிப்பாக வளர்ச்சி இருக்கிறது என்பதே அண்மை நிகழ்வுகள் உணர்த்தி வருகின்றன.

அவ்வகையில், ஒன்றிய பா.ஜ.க.வின் முன்னோடி மாடலாகவும், மோடியின் மாடலாகவும் விளங்கும் குஜராத் மாடல், இளைஞர்களை எவ்வாறு வஞ்சித்து வருகிறது என்பது, நேற்றைய (12.7.24) நாள் முதல், இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வரும் காணொளி வழி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அக்காணொளியில், சுமார் 40 பணியிடங்களுக்கான, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அலைமோதிக்கொண்டு நேர்காணலுக்கு செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சிவசேனா (தாக்கரே) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “40 பணியிடங்களே தேவை என்ற நிலையில் நேர்காணலில் நூற்றுக்கணக்கான மக்கள் அலைமோதியது தான் மோடியின் மாடலான, குஜராத் மாடல். அனைவரிடமும் வளர்ச்சி பற்றி பேசி வரும் மோடியால், ஏன் குஜராத் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “கடந்த 30ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி புரியும் குஜராத்தில், வேலைவாய்ப்பின்மை உச்சத்தை தொட்டுள்ளதற்கும், மோடி மாடல் எவ்வாறு நாட்டை வழிநடத்துகிறது என்பதற்கும், குஜராத்தில் பணி நேர்காணலுக்கு அலைமோதிய கூட்டமே சாட்சி” என குற்றம் சாட்டியுள்ளார்.

இதனையடுத்து, மக்களும் பா.ஜ.க.வின் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories