அரசியல்

"மன்னராட்சியை அடையாளமான செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும்" - சமாஜ்வாதி கட்சி கோரிக்கை !

"மன்னராட்சியை அடையாளமான செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும்" - சமாஜ்வாதி கட்சி கோரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் இருக்கை அருகே தமிழக மடாதிபதிகள் சூழ செங்கோல் ஒன்று பிரதமர் மோடியால் நிறுவப்பட்டது. அதை ஒட்டி அது சோழர் கால செங்கோல் என பல்வேறு கதைகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. ஆனால் அது சென்னையில் உள்ள ஒரு நகைக்கடையில் செய்யப்பட்டது என்பது அம்பலமானது.

செங்கோல் மன்னர் ஆட்சியை குறிக்கும் அடையாளம் என்பதால் அதனை ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டதை பலரும் விமர்சித்தனர். தற்போது பாஜக மைனாரிட்டியாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் செங்கோல் விவகாரம் எழுந்துள்ளது.

"மன்னராட்சியை அடையாளமான செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும்" - சமாஜ்வாதி கட்சி கோரிக்கை !

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம், பி ஆர்.கே.சௌத்ரி எழுதியுள்ள கடிதத்தில் "நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில். அது அரசரிருக்கான இடம் கிடையாது. எனவே நாடாளுமன்றத்தில் முடியாட்சி மற்றும் ஏகாதிபத்தியத்துக்கான அடையாளமாக இருக்கும் செங்கோலை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார் .

அதே போல, "தமிழ்நாட்டில் இருந்துதான் பாஜகவினர் செங்கோலை கொண்டு வந்தார்கள். ஆனால் கடந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தமிழ் மக்களே பாஜகவின் செங்கோல் அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை"என ஆர்.கே.சவுதரி சொன்ன கருத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் கெளரவ் கோகோய் ஆதரவு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories