2014, 2019 மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க, நாட்டு மக்களை பல விதத்தில் வஞ்சித்துள்ளது.
விபத்துகள், கலவரங்கள், பணவீக்கம், நில கையகப்படுத்தம், அதிகார அடக்குமுறைவாதம், மதவாதம் அதற்கான எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன.
இச்சூழலில், 2024 மக்களவை தேர்தலில் பெரும்பான்மை வலு இழந்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்த பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த 15 நாட்களிலேயே, 10 அகோர நிகழ்வுகளாக,
1. அபாயகரமான தொடர்வண்டி விபத்து.
2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்.
3. தொடர்வண்டி பயணிகளின் அவல நிலை.
4. நீட் மோசடி.
5. நீட் முதுநிலை தேர்வு நீக்கம்.
6. யூ.ஜி.சி நெட் தேர்வு வினாத்தாள் கசிவு.
7. அத்தியாவசியப் பொருட்கள் மீதான விலை உயர்வு.
8. தீ-க்கு இரையான வனப்பகுதிகள்.
9. நீர் பற்றாக்குறை.
10. காலநிலை மாற்றத்தால் உண்டான உயிரிழப்புகள் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளார் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி.
இதனையடுத்து, இணையவாசிகள் பலரும், 15 நாட்களுக்கே, இந்த நிலை என்றால், இனி வரும் காலங்கள் நிலை என்னவாகும் என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில், மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிற வகையில், இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற மக்களவை வலு அதிகரித்திருப்பதால், ஜனநாயகம் காக்கப்படும் என்ற பதிவுகளும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றனர்.