அரசியல்

நாட்டையே உலுக்கிய நீட் முறைகேடு - காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் - எங்கே ? எப்போது ? - விவரம்!

நாட்டையே உலுக்கிய நீட் முறைகேடு - காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் - எங்கே ? எப்போது ? - விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

நாட்டையே உலுக்கிய நீட் முறைகேடு - காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் - எங்கே ? எப்போது ? - விவரம்!

அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது.

இதையடுத்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் ஜூன் 23-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் ரூ.32 லட்சம் லஞ்சம் பெற்று வினாத்தாளை கசியவிட்டதாக சிக்கந்தர் என்ற இடைத்தரகர் ஒருவர் வாக்குமூலம் அளித்ததோடு, ரூ.1.8 கோடிக்கான காசோலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாட்டையே உலுக்கிய நீட் முறைகேடு - காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் - எங்கே ? எப்போது ? - விவரம்!

இந்த நீட் முறைகேடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆங்காகே ஆர்ப்பாட்டமும் போராட்டமும் வெடித்து வருகிறது. அண்மையில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் வீடு முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது டெல்லி போலீசார் FIR பதிவு செய்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி கட்சியினரும் நீட் வினாத்தாளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. வரும் ஜூன் 21-ம் தேதி (நாளை மறுநாள்) நாடு முழுவதும் உள்ள தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜூன் 24-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories