அரசியல்

“இதுபோன்ற அவமானத்தை சகிக்க கூடாது” - அமித்ஷா தமிழிசை விவகாரத்தில் கேரள காங்கிரஸ் அறிவுறுத்தல் !

தமிழிசை சௌந்தரராஜனை போதுமேடையில் வைத்து அமித்ஷா அவமானப்படுத்துவது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“இதுபோன்ற அவமானத்தை சகிக்க கூடாது” - அமித்ஷா தமிழிசை விவகாரத்தில் கேரள காங்கிரஸ் அறிவுறுத்தல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க படுதோல்வி அடைந்து, இந்தியா கூட்டணி 40-க்கு 40 என்று அபார வெற்றி பெற்றது. பாஜக தோல்வியடைந்தது மட்டுமின்றி போட்டியிட்ட 21 தொகுதிகளில் 11 தொகுதிகளில் பா.ஜ.க டெபாசிட் இழந்துள்ளது. பாஜகவின் இந்த தோல்விக்கு அண்ணாமலைதான் முக்கிய காரணம் என்று ஒரு சில அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தெலங்கானா முன்னாள் ஆளுநரும் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் நான் பா.ஜ.க கட்சியின் தலைவராக இருந்தபோது சமூக விரோதிகள் மாதிரி யாராவது தெரிந்தால் அவர்களை ஊக்குவிக்க மாட்டேன்.

ஆனால் இப்போது கட்சி பதவிகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களை தவிர்த்து கட்சிக்காக உழைக்க கூடியவர்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்" என்று பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தார். இது பாஜகவினர் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

“இதுபோன்ற அவமானத்தை சகிக்க கூடாது” - அமித்ஷா தமிழிசை விவகாரத்தில் கேரள காங்கிரஸ் அறிவுறுத்தல் !

இந்த சூழலில் ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடி, அமித்ஷா ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் தமிழிசையும் கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் தமிழிசை செல்லும்போது, அங்கே அமர்ந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரை தடுத்து நிறுத்தினார்.

மேலும் அவரை அழைத்து கடுமையாக கைநீட்டி மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அதற்கு தமிழிசையும் பவ்வியமாக தலையாட்டிக் கொண்டார். தொடர்ந்து அவரை ஏதோ எச்சரிப்பதுபோல் அமித்ஷா செய்கையும் செய்தார். இதையடுத்து தமிழிசை அங்கிருந்து நகர்ந்து பின்னால் இருக்கும் இடத்தில் அமர்ந்தார். இது தொடர்பான காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

“இதுபோன்ற அவமானத்தை சகிக்க கூடாது” - அமித்ஷா தமிழிசை விவகாரத்தில் கேரள காங்கிரஸ் அறிவுறுத்தல் !

ஒரு முன்னாள் ஆளுநரை பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான அமித்ஷா இவ்வாறு பொது மேடையில் வைத்து பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த வீடியோவுக்கு பலரும் பலவித கருத்துகளோடு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கேரளா காங்கிரஸ் கமிட்டி கருத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கேரளா காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள பதிவில், “இதுதான் பெண்களுக்கு எதிரான பாஜகவின் கலாச்சாரமும் நடத்தையுமாகும். சுயமரியாதை உள்ளவராக இருந்தால், தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவிலிருந்து இருந்து விலக வேண்டும். மருத்துவரும், முன்னாள் ஆளுநருமான ஒருவர், இதுபோன்ற அவமதிப்பை சகிக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. மூத்த தலைவர்கள் பலர் அண்ணாமலையை விமர்சித்து வந்தாலும், பா.ஜ.கவின் டெல்லி ஆதரவுடன் அண்ணாலை ஆட்டம் போட்டு வருவதாக தமிழ்நாட்டு பா.ஜ.கவினரே புலம்பி வருகின்றனர். இதை மெய்பித்து உள்ளது அமித்ஷாவின் மிரட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories