அரசியல்

வாரணாசியில் சரிந்த மோடியின் செல்வாக்கு : இனி மோடி பிம்பம் எடுபடாது!

வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடியின் வாக்கு சதவீதம் கடந்த இரண்டு தேர்தல்களைக் காட்டிலும் இந்த தேர்தலில் கடுமையாகச் சரிந்துள்ளது.

வாரணாசியில் சரிந்த மோடியின் செல்வாக்கு : இனி மோடி பிம்பம் எடுபடாது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் களம் கண்டார். தேர்தல் முடிவுகளை அடுத்து அஜய் ராயைவிட 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.

மேலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய மூன்று சுற்றுமுடிவுகளில் மோடி பின்னடைவை சந்தித்தார். இதுவரை பிரதமராக இருந்த யாரும் இப்படி பின்னடைவைச் சந்தித்தது இல்லை.

அந்த அளவிற்குக் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் கடும் நெறுக்கடியை மோடிக்குக் கொடுத்துள்ளார். கடந்த இரண்டு தேர்தல்களைக் காட்டிலும் இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்குக் கடுமையாக வாக்கு சரிந்துள்ளது.

வாரணாசியில் சரிந்த மோடியின் செல்வாக்கு : இனி மோடி பிம்பம் எடுபடாது!

2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல் முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து அஜய் ராயும் போட்டியிட்டார். மேலும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் 3,71,784 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார். அரவிந்த கெஜ்ரிவால் 2 லட்சம் வாக்குகள் (20.30%) பெற்றார். அஜய் ராய் 7.34% வாக்குகள் பெற்றார்.

2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் வாரணாசி தொகுதியிலேயே மோடி போட்டியிட்டார். இதில் 4,79,505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலிலும் மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டியிட்டு 14.38% வாக்குகள் பெற்றார்.

2024 இம்முறை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயிடம் 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில்தான் மோடி வெற்றி பெற்றுள்ளார். அஜய் ராஸ் தோற்றாலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் 4,60,457 வாக்குகள் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தேர்தல்களிலும் அஜய் ராயின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்குச் செல்வாக்கும் கூடியுள்ளது. அதேநேரம் மோடியின் வாக்கு சதவீதம் கடுமையாகச் சரிந்துள்ளது. இந்த தேர்தலில் 54.24% வாக்குகள் மோடிக்குச் சரிந்துள்ளது. இதில் இருந்தே தெரிகிறது இனி மோடியின் பிம்பம் எடுபடாது என்று.

banner

Related Stories

Related Stories