அரசியல்

EVM இயந்திர முறைகேடை விட பெரிய முறைகேடு இதுதான் - தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு !

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடை விட பெரிய முறைகேடு தேர்தலில் நடப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

EVM இயந்திர முறைகேடை விட பெரிய முறைகேடு இதுதான் - தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களை தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் நடத்துகிறது. தேர்தல்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிய பல்வேறு வழிமுறைகளை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள வகை செய்யும் வகையில் விவிபேட் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் யார் யாருக்கு வாக்களித்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும் இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. மேலும், மாதிரி வாக்குப்பதிவில் மற்ற வேட்பாளர்களுக்கு பதிவாகும் ஓட்டுகள் பாஜகவுக்கு சென்றதை தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டது. ஆனால், அது சரி செய்யப்படும் என்று கூறியது.

EVM இயந்திர முறைகேடை விட பெரிய முறைகேடு இதுதான் - தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு !

இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடை விட பெரிய முறைகேடு தேர்தலில் நடப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான், "நான் கடந்த 9 மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன்.ஆனால் முதல் முறையாக இப்போதுதான் ARO மேஜையில் 'வேட்பாளர்களின் முகவர்களுக்கு' அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது EVM முறைகேடு குற்றச்சாட்டை காட்டிலும் பெரியதான முறைகேடாகும். அனைத்து வேட்பாளர்களுக்கும் இந்த பிரச்னையை நான் சுட்டிக்காட்டுகிறேன். தேர்தல் ஆணையம் இந்த பிரச்னையை விரைவில் சரிசெய்யும் என்று நம்புகிறேன் " என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories