அரசியல்

இலவச பேருந்து திட்டத்தால் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைகிறதாம் : ச்சே.. மோடிக்கு என்ன ஒரு கவலை!

இலவச பேருந்து திட்டத்தை விமர்சித்த பிரதமர் மோடிக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இலவச பேருந்து திட்டத்தால் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைகிறதாம் :  ச்சே.. மோடிக்கு என்ன ஒரு கவலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்டதும் பெண்களது வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் விடியல் பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் அமல்படுத்தியதை அடுத்து பெண்கள் மகிழ்ச்சியாக பேருந்துகளில் சென்று வருகிறார்கள். இதனால், சராசரியாக பெண் ஒருவருக்கு மாதம் ரூ.800 சேமிக்க உதவுகிறது. இந்த பணம் அவர்களது குடும்பத்திற்கு சத்தான உணவுகளை வாங்குவது முதல் பல அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இல்லத்தரசிகள், முறைசாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், மாணவிகள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என பல்வேறு தரப்பினரும் விடியல் பயணத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்த திட்டத்தை உலக நாடுகள் பலவும் வரவேற்றதை அடுத்து தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசை பின்பற்றி கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படி பயணடையும் மகளிர் மட்டுமல்லாது உலகமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த விடியல் பயணதிட்டத்தை பாராட்டி வருகிறார்கள்.

இலவச பேருந்து திட்டத்தால் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைகிறதாம் :  ச்சே.. மோடிக்கு என்ன ஒரு கவலை!

இந்நிலையில் தொடர்ச்சியாகவே இலவச திட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பிரதமர் மோடி தற்போது மீண்டும் மகளிர் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ள இலவச பேருந்து திட்டத்தை நாசுக்காக விமர்சித்துள்ளார்.

பிரபலமான இந்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள பிரதமர் மோடி, ”இலவச பேருந்து பயண திட்டத்தால் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக” கூறி இருக்கிறார். எப்படி ஒரு பிரதமரால் இப்படி ஆதாரங்கள் இல்லாமல் பொய் பேச முடிகிறது என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அது சரி சாவர்க்கர் வழி வந்தவர்கள் உண்மை பேசினால்தான் ஆச்சரியப்பட வேண்டி இருக்கும்.

பிரதமர் மோடி சொல்வது போல் மெட்ரோ ரயில்களில் பயணிகளில் எண்ணிக்கை குறைகிறதா? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும் கூட சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தேதான் வருகிறது.

இப்படி இருக்க மகளிர் மத்தியில் இலவச திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்ற ஒரே காரணத்தினாலும், பா.ஜ.கவின் செல்வாக்கு நாடு முழுவதும் குறைந்துவிட்டது என்ற வயிறு எரிச்சல் காரணத்தாலும், பிரதமர் மோடி இலவச பேருந்து பயண திட்டத்தை விமர்சித்துள்ளார் என்பது அம்பலப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories