கடந்த 10 ஆண்டுகளில், விவசாய சிக்கல், மணிப்பூர் சிக்கல், இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை, கலவரங்கள் என எவ்வகையான சிக்கல் எழுந்தாலும்,
அதில் மோடியின் பங்கு அமைதி காப்பதே. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினாலும் சரி, நியாயமான போராட்டத்தில் பல உயிர்கள் பறிபோனாலும் சரி, அது வேறு ஏதோ நாட்டில் நடப்பது போலவே, மோடியின் செயல்கள் இதுவரை அமைந்துள்ளன.
எனினும், தேர்தல் நெருங்கி விட்டது என்பதற்காக, விதவிதமாக உடையணிவதும், சற்றும் தொடர்பற்ற வகையில் பேசுவதும், பொய்களை அள்ளி விடுவதும், தேர்தல் விதிமுறைகளை மீறுவதும் என முழு ஈடுபாட்டில் வேலைகளை செய்து வருகிறார் மோடி.
அவ்வகையில் பீகார் மாநிலத்தில், சிங் சமூகத்தினருக்கு, மோடி உணவு சமைத்து பரிமாறுவது போன்ற காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து, நடிகர் பிரகாஷ் ராஜ்,“வாக்களிக்க செல்லும் போது, மோடியின் கபட நாடகத்தை மறக்க வேண்டாம். ஜனநாயகத்தையும், இந்தியாவையும் காப்பாற்றுவோம்” என எச்சரித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பலரும், நாடகமாடுவதில் வல்லவராக இருக்கும் மோடியை பற்றி, மக்கள் தெளிவாக புரிந்துகொண்டுள்ளனர். அது மக்களின் வாக்குகள் வழி வெளிப்படும் என தெரிவித்து வருகின்றனர்.