அரசியல்

பாஜக முன்னாள் முதலமைச்சர் பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு : விவசாயிகள் போராட்டத்தால் பிரச்சாரம் ரத்து !

ஹரியானா முன்னாள் முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரின் பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக முன்னாள் முதலமைச்சர் பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு : விவசாயிகள் போராட்டத்தால் பிரச்சாரம் ரத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை.அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக அரசின் கடும் எதிர்ப்புகளை மீட்டி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது பாஜக அரசு.

அந்த வகையில் ஹரியானா - ஷாம்பு எல்லையில் போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் மீது பாஜக ஆளும் ஹரியானா மாநில போலிஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

பாஜக முன்னாள் முதலமைச்சர் பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு : விவசாயிகள் போராட்டத்தால் பிரச்சாரம் ரத்து !

விவசாயிகளின் இந்த போராட்டம் தற்போது தேர்தல் களத்திலும் எதிரொலித்துள்ளது. பாஜக ஆளும் ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கூட பாஜக வேட்பாளர்களை கிராமத்துக்குள் நுழைய விடாமல் விவசாயிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.அந்த வகையில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரின் பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹரியானாவில் கர்னால் தொகுதியில் உள்ள தாச்சர் என்ற இடத்தில் முன்னாள் முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு கூடிய நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக மனோகர்லால் கட்டரின் பிரச்சார கூட்டம் ரத்து செய்யப்பட்டது. முன்னாள் முதலமைச்சருக்கே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

banner

Related Stories

Related Stories