அரசியல்

மீண்டும் மோடியால் அவமதிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு : பழங்குடி சமூகம் என்பதே காரணமா ?

பாஜக மற்றும் மோடியால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் மோடியால் அவமதிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு : பழங்குடி சமூகம் என்பதே காரணமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய வரலாற்றின் அடையாளங்களில் ஒன்று பழைய நாடாளுமன்ற கட்டடம். இங்குதான் இந்தியாவின் பெருமையாகப் போற்றப்படும் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு தரமாக இருக்கும் நாடாளுமன்றத்திற்குப் பதிலாக புதிய நாடாளுமன்றத்தைக் கட்டியது.

அதுவும் மக்கள் கொரோனா காலத்தில் அவதிப்பட்டபோது, ரூ.1200 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கான பணிகள் வேகமாகச் செயல்படுத்தப்பட்டது. எதிர்கட்சிகள் கண்டித்தும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்தது ஒன்றிய அரசு.

இதையடுத்து புதிய நாடாளுமன்றக் கட்டடம் கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்திய அரசின் தலைவராக இருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.

மீண்டும் மோடியால் அவமதிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு : பழங்குடி சமூகம் என்பதே காரணமா ?

அதனைத் தொடர்ந்து ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அரசு சார்பில் முக்கிய அரசியல் தலைவர்கள் அழைக்கப்பட்ட நிலையில், அதற்கும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் மூலம் குடியரசுத் தலைவரை பாஜக புறக்கணிக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகியது.

இந்த நிலையில், பாஜக மற்றும் மோடியால் குடியரசுத் தலைவர் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளார். பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டப்பட முக்கிய காரணமாக இருந்த பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு ஒன்றிய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்தது. அத்வானியின் வயதை காரணமாக கொண்டு அவரின் வீட்டுக்கே சென்று விருதினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார்.

அப்போது பிரதமர் மோடியும் உடன் இருந்தார். ஆனால், விருது வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அத்வானி மற்றும் மோடி அமர்ந்திருந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மட்டும் நின்றுகொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்வானி வயது காரணமாக அமர்ந்திருந்தார் என்றாலும், மோடி அமர்ந்திருந்தது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் மோடி மற்றும் பாஜகவால் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories