அரசியல்

அரியணையை மாற்றும் சூழலில், “அரியானா”: முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

பா.ஜ.க ஆளும் மற்ற மாநிலங்களை போல, அரியானாவிலும் மக்களுக்கான வளர்ச்சி இன்றி, ஆட்சி அதிகாரம் மட்டுமே தலைவிரித்து ஆடுகிற வேளையில், மக்களின் பார்வை, ‘இந்தியா கூட்டணி’ பக்கம் திரும்பியுள்ளது.

அரியணையை மாற்றும் சூழலில், “அரியானா”: முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

1966 ஆம் ஆண்டு வரை, கிழக்கு பஞ்சாபின் பகுதியாக இருந்த நிலப்பரப்பு, தனி மாநிலமாக்கப்பட்டு, அரியானா என பெயரிடப்பட்டது.

பஞ்சாப்பில் இருந்து பிரிக்கப்பட்டிருந்தாலும், அரியானா நிலப்பரப்பிற்கென தனி சிறப்புகள் உண்டு. இது 22 மாவட்டங்களுடன், 90 சட்டமன்ற தொகுதிகளையும், 10 மக்களவை தொகுதிகளையும் கொண்டுள்ளது.

அரியணையை மாற்றும் சூழலில், “அரியானா”: முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

சுமார், 3.09 கோடி மக்கள் வாழும் இம்மாநிலத்தில், கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களிலும், பா.ஜ.க. கட்சியே வென்று ஆட்சியை தக்கவைத்து வருகிறது. இந்நிலையில், தனது 10 ஆவது ஆண்டில் இருக்கும், அரியானா மாநில அரசு, ஏமாற்றுத்தனத்திற்கு பெயர்போன அரசாகவும் உருவெடுத்துள்ளது.

தனது மாநிலங்களை வஞ்சிப்பதோடு மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகளையும், கொடுமைப்படுத்தி, கொல்லவும் துணிந்துள்ளது, பாசிச பா.ஜ.க.

கடும் நிதி நெருக்கடி காரணமாகவும், வருவாய் இழப்பு காரணமாகவும், வறுமையில் தள்ளாடி வந்த விவசாயிகள், ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்தோடு, பஞ்சாப்பிலிருந்து அரியானா வழியாக, டெல்லி செல்ல திட்டமிட்டனர்.

ஆனால், அமைதி வழியில் செல்ல இருந்த விவசாயிகளை, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, சாலையில் ஆணி அடித்து தடுத்து நிறுத்தி, நேர்மையான போராட்டக்களத்தை, வன்முறை களமாக மாற்றியது அரியானா அரசு.

இதன் காரணமாக, பஞ்சாப்-ஐ சேர்ந்த 21 வயது விவசாயி, அரியானா காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், சில விவசாயிகளும் தள்ளு முள்ளு காரணமாக இறக்க நேரிட்டது.

எனினும், இறையாண்மைக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும், இந்நடவடிக்கை நிகழ்ந்து விட்டது என்ற எண்ணம் சிறிதளவும் இல்லாமல், தாங்கள் செய்து கொண்டிருந்ததை, விடாமல் தொடர்ந்து செய்து வருகிறது அரியானா அரசு.

இவை தவிர்த்து, கடந்த 2 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர்களின் வீடுகளையும் தரைமட்டமாக்கியுள்ளது, பா.ஜ.க.

அரியணையை மாற்றும் சூழலில், “அரியானா”: முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

குறிப்பாக, இவ்வகை வீடு இடிப்புகள், மற்றும் வெறுப்புணர்ச்சியுடைய பேச்சுகள் ஆகியவற்றிற்கு இரையாகுபவர்களாக, அதிகாரமற்ற இஸ்லாமிய மக்களே இருந்து வருகின்றனர்.

இவ்வாறு, சிறும்பான்மை இன மக்களை வஞ்சிக்கும், அரியானா பா.ஜ.க அரசு, பெரும்பான்மை மக்களுக்கானதாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) எடுத்துரைத்துள்ளது.

கடந்த ஆண்டு, CMIE வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவிலேயே வேலைவாய்ப்பின்மை அதிகம் உள்ள மாநிலம் அரியானா என்றும், இது தேசிய அளவிலான வேலைவாய்ப்பின்மையில் 37.4% என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னடைவு, வேலைவாய்ப்பில் மட்டுமல்லாது, கல்வி, சுகாதாரம், உணவு உள்ளிட்டவையிலும் நீடித்து வருகிறது.

இச்சூழலில், எதிர்த்து கேட்க யாரும் இல்லை என்ற எண்ணத்துடன், ஒன்றிய பா.ஜ.க.வின் அறிவுரைக்கு இணங்க, மேலும் பல குற்றங்களை கூட்டிக்கொண்டு தான் செல்கிறது அரியானா பா.ஜ.க.

இதனால், அதிருப்தியடைந்த பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜேந்திர சிங் உள்ளிட்ட பலர், அக்கட்சியிலிருந்து விலகி இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளனர். கூடுதலாக, 10 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஜனநாயக ஜனதா கட்சியும் (JJP) இணைந்து, இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.

இவ்வாறான, எதிர்கட்சிகளின் ஒன்றிணைவு, ஆளும் பா.ஜ.க.வை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் காரணமாகவே, கடந்த 9 ஆண்டுகளாக, முதலமைச்சர் பதவி வகித்து வந்த மனோகர் லால் கட்டார் விலக்கப்பட்டு, நாயப் சிங் சமி முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜாட் இனத்தை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் வழங்கினால் ஜாட் மக்கள் நமக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று நினைக்கிறது பா.ஜ.க. ஆனால், அரியானா மக்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் என்பதை பா.ஜ.க மறந்திருப்பதையே இது உணர்த்துகிறது.

நியாயமாக போராடிய விவசாயிகளை ஏளனமாக நினைத்து கொன்றுவிட்டு ஒரு சிறு மன்னிப்பைக்கூட கேட்காமல் விவாசாயிகளை துன்புறுத்துபவர்களை வரும் தேர்தல் மூலம் தண்டிக்க மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெளிவு பெற்றிருக்கிறது.

banner

Related Stories

Related Stories