அரசியல்

மூன்றாவது அணியில்லை! பா.ஜ.க.வை மூழ்கடிக்கும் ஒற்றை அணி : நாளுக்கு நாள் மக்கள் ஆதரவுடன் ‘இந்தியா கூட்டணி!’

இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமாக நடந்த பாட்னா பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்!

மூன்றாவது அணியில்லை! பா.ஜ.க.வை மூழ்கடிக்கும் ஒற்றை அணி : நாளுக்கு நாள் மக்கள் ஆதரவுடன் ‘இந்தியா கூட்டணி!’
ANI
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய அளவில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துவிடலாம் என்ற எண்ணத்தோடு, தேர்தல் நாள் அறிவிக்கும் முன்பே, முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அவர்களின் அவசரத்தனத்திற்கு விடையாக, பா.ஜ.க.வின் தலைவர்கள் பலரும் அதிருப்தியடைந்து, கட்சியிலிருந்து விலகவும் தொடங்கியுள்ளனர்.

எனினும், அக்கட்சியிலிருந்து விலகுபவர்கள், விலகுவதற்கான உரிய காரணத்தை தெரிவிக்காமல், மழுப்பல் கூற்றுகளாக, “நான் மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்த இருக்கிறேன்”, “மீண்டும் மருத்துவ துறையில் பணியாற்ற இருக்கிறேன்” என தெரிவித்திருப்பது நகைப்புரியதாக மாறியுள்ளது.

இவ்வாறு பா.ஜ.க.வின் குழப்ப அரசியலுக்கு இடையே, ஒற்றை அணியாக இணைந்து, பாசிச பா.ஜ.க.வின் எதிரியாக மாறியுள்ளது, இந்தியா கூட்டணி.

அவ்வகையில், இந்தியா கூட்டணி உருவெடுத்த பீகார் மாநிலத்தில், தங்களின் வலுவை மீண்டும் உரக்கக் காட்டியிருக்கிறார்கள் இந்தியா கூட்டணியின் தலைவர்கள்.

இந்தியா கூட்டணியின் ஒற்றுமை பாலமாகவும், மாபெரும் ஆற்றலாகவும் விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாட்னா பொதுக்கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், அவரின் அடிப்படை கொள்கையான, “பாசிச எதிர்ப்பை” தூக்கிப்பிடித்திருக்கிறது பாட்னா பொதுக்கூட்டம்.

மூன்றாவது அணியில்லை! பா.ஜ.க.வை மூழ்கடிக்கும் ஒற்றை அணி : நாளுக்கு நாள் மக்கள் ஆதரவுடன் ‘இந்தியா கூட்டணி!’

அக்கூட்டத்தில், பா.ஜ.க.வின் பாசிச பொய்ப்பரப்பல்கள் குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே; ஆர்.ஜெ.டி தலைவர்கள் லாலு பிரசாத், தேஷஸ்வி; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி; சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் ஆகியோர் வீர உரையாற்றினர்.

மோடியின் பா.ஜ.க அரசு என்பது பொய்களின் தொழிற்சாலை. ஆட்சியை கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்லும் தன்மை கொண்ட கட்சி பா.ஜ.க, அதற்கு நிதிஷ் குமார் கட்சியும் ஓர் உடந்தையே” என தேஜஸ்வியும்,

அடுக்கு மொழியில், வாக்குறுதிகளை அள்ளிக்குவிக்கும் பா.ஜ.க, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையையே மறந்து செயல்படுகிறது” என சீதாராம் யெச்சூரியும் தங்களது கண்டனங்களை முன்வைத்தனர்.

தொடர்ந்து பேசிய, அகிலேஷ் யாதவ், கார்கே, லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள், நாட்டின் வேலைவாய்ப்பின்மை குறித்தும், மோடியின் அப்பட்டமான பொய்கள் குறித்தும் விரிவுரையாற்றினர்.

இவர்களின் உரைகளுக்கு ஆதரவாய், பார்வையாளர்களாக இருந்த, இலட்சக்கணக்கான மக்களிடமிருந்து கைத்தட்டல்கள் குவிந்தன.

இக்கைத்தட்டல்களால் எழுந்த ஒலி, பா.ஜ.க.வின் சாயல்களோடு செயல்படும் தேசிய ஊடகங்களை வியப்பில் ஆழ்த்தி, பா.ஜ.க.வின் காதுகளை கிழித்துள்ளன.

banner

Related Stories

Related Stories