அரசியல்

”குஜராத் மாநில அரசு பிச்சை எடுக்க வேண்டுமா?” : கனிமொழி MP பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சாரக பிரதமர் மோடி இருந்த போது ஒன்றிய அரசை விமர்சித்து பேசிய வீடியோவை தனது x சமூகவலைதளத்தில் கனிமொழி எம்.பி பகிர்ந்துள்ளார்.

”குஜராத் மாநில அரசு பிச்சை எடுக்க வேண்டுமா?” : கனிமொழி MP பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர் அடுத்தநாள் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதேநேரம் எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. உதாரணத்திற்குத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மொத்தமே வெறும் ரூ. 2 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உத்தர பிரதேச மாநிலத்திற்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அநீதியைக் கண்டித்து கர்நாடகா, தமிழ்நாடு, கேரள போராட்டம் அறிவித்தன. அதன்படி நேற்று முன்தினம் ஒன்றிய அரசை கண்டித்து கர்நாடக அரசு முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.

நேற்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கருப்புச் சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சாரக பிரதமர் மோடி இருந்த போது ஒன்றிய அரசை விமர்சித்து பேசிய வீடியோவை தனது x சமூகவலைதள பதிவில் 'ஒரு காலத்தில் முதலமைச்சர் இப்போது பிரதமர்' என தலைப்பிட்டு கனிமொழி எம்.பி பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் மோடி, ”குஜராத் மாநில அரசு, ஒன்றிய அரசுக்கு வரியாக ரூ.60,000 கோடியை அளித்து வருகிறது . ஆனால் ஒன்றிய அரசு குஜராத் அரசு திருப்பி கொடுப்பது ரூ. 8000 கோடி.. ரூ.10000 கோடி.. ரூ. 12000 கோடி. குஜராத் மாநில அரசை என்ன பிச்சைக்காரர் என்று நினைக்கிறீர்களா?.

ஒன்றிய அரசிடம் நிதியைப் பெற குஜராத் மாநில அரசு பிச்சை எடுக்க வேண்டுமா?.” என தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories