இந்த ஆண்டு மே மாதத்தோடு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து 10 ஆண்டுகால மக்கள் விரோத மற்றும் பாசிச பா.ஜ.க ஆட்சியை முடிவு கட்டும் வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியால் பா.ஜ.க அச்சத்தில் உள்ளது. இதற்கு காரணம் பா.ஜ.கவை காட்டிலும் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்குவங்கம், கர்நாடகா, பஞ்சாம், ஜார்க்கண்ட் என பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.
இதனால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் பா.ஜ.கவுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. தோல்வி அச்சத்தால்தான் ஒன்றிய பா.ஜ.க அரசு ED உள்ளிட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகிறது. இருந்தும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் துணிச்சலுடன் பா.ஜ.கவின் சதித்திட்டங்களை முறியடித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றிபெறும் என தெரிவித்துள்ளது. அதேபோல் பா.ஜ.க மற்றும் அதிமுகவிற்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி கடும் பின்னடைவைச் சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு எதிர்க்கட்சி ஆட்சி நடைபெற்று வரும் மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி வாய்ப்புகளை இழக்கும் என்றும் இந்தியா டுடே கணித்துள்ளது.