அரசியல்

தேசிய வாக்காளர் நாள்: பாஜக ஆட்சியில் சிதையும் வாக்கு உரிமை!

தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், வாக்குரிமை மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடு குறித்த விமர்சனங்களையும் ஆராய வேண்டியிருக்கிறது.

தேசிய வாக்காளர் நாள்: பாஜக ஆட்சியில் சிதையும் வாக்கு உரிமை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

1950-ம் ஆண்டு, இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான சனவரி 25- ஐ, தேசிய வாக்காளர் நாளாக கடந்த 2011-ம் ஆண்டு அறிவித்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில், 14-வது வாக்காளர் நாளுக்கான விழாவை இன்று புதுதில்லியில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இவ்விழாவில், 2024-ம் ஆண்டு தேர்தல் பணியில் ஆணையத்தின் முன்முயற்சிகள் அடங்கிய தொகுப்பு, விழிப்புணர்வு குறும்படம், அஞ்சல் தலை ஆகியவை வெளியிடப்படவுள்ளன. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் சிறந்த தேர்தல் அதிகாரிகளுக்கு விருதுகளும் வழக்கப்படவிருக்கின்றன.

மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேர்தல் அமைப்பாளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் புதுதில்லி விழாவில் கலந்து கொள்கின்றனர் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய வாக்காளர் நாள்: பாஜக ஆட்சியில் சிதையும் வாக்கு உரிமை!
தேசிய வாக்காளர் நாள்: பாஜக ஆட்சியில் சிதையும் வாக்கு உரிமை!

புதுதில்லியில் மட்டுமல்லாது, தேசிய அளவில் ஒவ்வொரு தொகுதியிலும் தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது ஆணையம்.

அனைத்திற்கும் முன்னோடியாக செயல்படும் தமிழ்நாட்டில், வாக்காளர் நாளுக்கு முந்தைய நாளே, திருச்சி மாவட்ட ஆட்சியர், மாணவர்களைக் கூட்டி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் இளைஞர் பட்டாளம் உலகம் வியக்கக்கூடிய அளவில் பெருகிக்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பெரிதளவில் இல்லை என தரவுகள் தெரிவிக்கின்றன. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தகுதிபெற்ற வாக்காளர்கள் 91.2 கோடியாக இருந்த நிலையிலும், வாக்களித்தவர்கள் 61 கோடியாகவே இருந்தது.

வயது தகுதிபெற்ற பலர் வாக்காளர் பட்டியலில் தம் பெயர்களை சேர்க்காத நிலையும் உள்ளது. மக்களாட்சியில், மக்களின் அதிகப்படியான அதிகாரமாக வாக்கு அதிகாரம் உள்ளது. அதனை சரிவர பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்த்தவே இவ்விழா நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய வாக்காளர் நாள்: பாஜக ஆட்சியில் சிதையும் வாக்கு உரிமை!

எனினும், தன்விருப்பம் கொண்ட வாக்கு உரிமையை, அரசியலுக்காக தவறாக பயன்படுத்துகிற நிலையும் உள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு கர்நாடகத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கு முன், எதிர்ப்பு ஓட்டுகளை குறைக்கும் திட்டத்தில் பாஜக பல சிக்கல்களை செய்தது. இஸ்லாமியர்கள் மற்றும் தலித்களின் ஆயிரக்கணக்கான வாக்கு உரிமைகளை பறிப்பதற்கான மறைமுக சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.

மேலும், வாக்கு இயந்திரங்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், “கன்னோசி மாவட்டத்தின், ஒரு தொகுதியில் மட்டும் சுமார் 115 வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது,” என சில மாதங்களுக்கு முன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இன்னொரு பக்கத்தில் தேர்தல் பத்திரங்கள், தற்காலத்தில் தேர்தல் முறையை வணிக நிறுவனங்களின் விளையாட்டாக அரசியலை மாற்றி விட்டிருக்கிறது.

2017ம் ஆண்டில் பாஜக கொண்டு வந்த தேர்தல் பத்திரங்களால், தேர்தல் நன்கொடைகளை அளிப்பவர்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டிய நிலை கிடையாது என்ற நிலை உருவாக்கப்பட்டது. விளைவாக பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆளும் பாஜகவுக்கு தேர்தல் நிதியாக ஆயிரக்கணக்கான கோடிகள் கொடுக்கும் பழக்கம் உருவானது.

அந்த நன்கொடைகளின் பலனாக பெருங்கூட்டங்கள், பேரணிகள், புகைப்பட பதிவுகள் என ஆடம்பர செலவு செய்து, போலி வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏய்த்து ஆட்சியமைத்த பாஜக, அந்த நிறுவனங்களுக்கு தேவையானவற்றை செய்து தரும் அவலத்தையும் மறந்துவிட முடியாது.

இவை எல்லாவற்றையும் விட, சமீபகாலமாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடே கூட கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

பாஜகவின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை தேர்தல் ஆணையரே வழிமொழியும் சார்புத்தன்மை தொடங்கி, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் புகாரை கேட்க, ஆணையர் நேரம் கொடுக்காதது வரை தேர்தல் ஆணையம் பக்கசார்பு கொண்டுள்ளதாக எழும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட முடியாது.

ஒரு படி மேலே சென்று, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தேர்தல் ஆணையர் மசோதாவும் சட்டமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி இந்திய தேர்தல் ஆணையரை பிரதமரும் ஒன்றிய அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் கொண்ட குழுவே பரிந்துரைக்கும். இக்குழுவில் பெரும்பான்மையாக இருப்பது ஒன்றிய அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய வாக்காளர் நாளினைக் கொண்டாடுவதோடு நின்றுவிடாமல், வாக்குக்கான உரிமை மற்றும் தேர்தல் முறை பற்றிய உரையாடலையும் இந்நாளில் முன்னெடுப்போம்.

banner

Related Stories

Related Stories