அதானியும் மோடியும்.!
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி நிறுவனம் தொடர்பாக பரப்பரப்பு அறிக்கை வெளியீட்டது.
கணக்கு வழக்குகளில் பொய் தரவுகளைப் பரப்புதல்; தவறான பொருளியல் புள்ளிவிவரங்களைக் காட்டி, பங்குதாரர்களை ஏமாற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியிருந்தது.
இந்த குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்த முடியாது இது தொடர்பாக சிறப்பு விசாரணை தேவை என உச்ச நீதிமன்றத்தில் சிலரால் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் “அதானி குழமத்திற்கு எதிராக சிறப்பு விசாரணை தேவையற்றது என்றும், செபி விசாரணையே போதுமானது,” என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இதனை விமர்சித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “இது சரியான தீர்ப்பு அல்ல என்றும்; கடந்த மாதம், நாடாளுமன்றத்தில், அதானி குழுமம் தொடர்பான பல்வேறு கேள்விகளை முன்வைத்ததற்காக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்திரா, பதவி நீக்கப்பட்டதன் தொடர்ச்சியே, இந்த தீர்ப்பு” என்றும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற கடந்த 9 ஆண்டுகளில் அதானிக்கு தாரைவார்த்த பொது சொத்துகள் ஏராளம்.
அலைக்கற்றை, மின் உற்பத்தி ஆலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், எண்ணெய் ஆலைகள், புதுபிக்கதக்க ஆற்றல் ஆலைகள், ஊடகங்கள், சிமெண்ட் ஆலைகள் என நாட்டின் பொது உடைமைகள், பல இன்று அதானியின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 2020 க்கு பின்னான, மூன்று ஆண்டுகளில் சுமார் 1500% வளர்ச்சியடைந்திருக்கிறது.
ஃபோர்ப்ஸ் (FORBES) இன் உலக பணக்காரர்கள் தரவரிசையில், மூன்றாவது பணக்காரராகவும், ஆசியாவிலேயே முதல் பணக்காரராகவும், அதானி வளர்ச்சியடைந்திருந்தார்.
ஆனால் ஹிண்டன்பர்கின் ஒற்றை அறிக்கையால்,“உலகின், மூன்றாம் பெரும் பணக்காரராக இருந்த, அதானி, மளமளவென வீழ்ச்சியடைந்தார்.” இந்த வீழ்ச்சியை கண்டு அதானியை விட அதிகம் பதறியது மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு தான்.
எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என யார் அதானி தொடர்பாக கேள்வி கேட்டாலும் அவர்கள் மிரட்டப்பட்டும், தூக்கியெரியப்பட்டும் வருவது தொடர் கதையாகவே மாறி இருக்கிறது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானிக்காகவே தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். குளிர்கால கூட்டத்தொடரில் அதே குற்றச்சாட்டை தான் மஹீவா மொய்தராவும் கூறினார்.
நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் தனக்கு வெற்றி கிடைத்திருப்பதாக அதானியும்-மோடியும் பெரு மூச்சு விட்டிருந்தாலும் அவரின் பங்குச்சந்தை சரிவை மக்கள் கொண்டாடிய நாளிலே மோடானிக்கள் கீழே வீழ்ந்துவிட்டனர்.!