அரசியல்

"இது கேரளா, துணைவேந்தரே வெளியேறு" - ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் குதித்த பல்கலைக்கழக மாணவர்கள் !

பல்கலைக்கழகத்தில் இவ்வாறு மதநிகழ்ச்சியை நடத்துவதற்கு மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் (SFI) கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

"இது கேரளா, துணைவேந்தரே வெளியேறு" - ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் குதித்த பல்கலைக்கழக மாணவர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் செயல்பாடு காரணமாக மாநில அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆளுநர் அரசின் அனுமதி இல்லாமல் கூட்டங்களில் கலந்துகொள்வது, பல்கலைக்கழகத்தில் இந்துத்துவ கூட்டங்களை நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், காலிகட் பல்கலைகழகத்தில் சனாதன் தர்மா சேர் மற்றும் பாரதிய விசார கேந்திரம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இக்கருத்தரங்கில் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்வதாகவும் கூறப்பட்டது.

"இது கேரளா, துணைவேந்தரே வெளியேறு" - ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் குதித்த பல்கலைக்கழக மாணவர்கள் !

அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் இவ்வாறு மதநிகழ்ச்சியை நடத்துவதற்கு மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் (SFI) கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து பல்கலைக்கழக இந்திய மாணவர் சங்க கிளை சார்பில் காலிகட் பல்கலைகழகத்தில் ஆளுநருக்கு எதிராக ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்ட போராட்டங்கள் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக "சங்கி துணைவேந்தரே வெளியேறு, மிஸ்டர் கான் இது கேரளா" என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களை வைத்து மாணவர்கள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போஸ்டரை போலிஸார் அப்புறப்படுத்தினாலும், மாணவர்கள் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டிய வண்ணம் இருந்தனர். மாணவர்களின் இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories