அரசியல்

திடீரென மக்களைவையில் புகுந்த மர்ம நபர்கள்.. குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி - நடந்தது என்ன ?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பாதுகாப்பு வளையத்தை மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேரை எம்.பி.க்களே மடக்கி பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

திடீரென மக்களைவையில் புகுந்த மர்ம நபர்கள்.. குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி - நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று நாடாளுமன்றத்தின் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 22 ஆண்டுகள் ஆகும் நிலையில், வீரர்களுக்கு தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர். அதாவது கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.

திடீரென மக்களைவையில் புகுந்த மர்ம நபர்கள்.. குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி - நடந்தது என்ன ?

இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளன்று உயிரிழந்த வீரர்களுக்கு எம்.பிக்கள் மரியாதை செலுத்துகின்றனர். அந்த வகையில் இன்று வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி எம்.பிக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது.

திடீரென மக்களைவையில் புகுந்த மர்ம நபர்கள்.. குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி - நடந்தது என்ன ?

அப்போது மக்களைவையில் எம்.பிக்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து பெண் உட்பட 2 மர்ம பேர் அரங்கிற்குள் குதித்தனர். அதோடு அவர்கள் 2 பேரும் வண்ணம் வரும் பொருளையும் எடுத்து வந்தனர். மேலும் 'சர்வாதிகாரம் ஒழிக' என்ற கோஷங்களை எழுப்பினர்.

இதனை கண்டு பதறிய சக எம்.பி.-க்கள் அலறியடித்து போகவே, அதில் சிலர் அவர்களை பிடித்தனர். அவர்கள் பிடிக்க முயற்சி செய்யும்போது அந்த நபர்கள், மேஜை மீது குதித்து குதித்து ஓடிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து தீவிர முயற்சிகளுக்கு பிறகு அந்த நபர்களை பிடித்து சக எம்.பி-க்கள் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories