அரசியல்

"முதல்வரை நீக்க வேண்டும், பிராந்திய கட்சி வேண்டும்" - மணிப்பூர் இளைஞர்களின் கோரிக்கை நிராகரிப்பு !

மணிப்பூர் முதலமைச்சரை மாற்றவேண்டும், அங்கு பிராந்திய கட்சி உருவாக்கவேண்டும் என மணிப்பூர் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"முதல்வரை நீக்க வேண்டும், பிராந்திய கட்சி வேண்டும்" - மணிப்பூர் இளைஞர்களின் கோரிக்கை நிராகரிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு பின்னர் அங்கு இணையம் மீண்டும் வழங்கப்பட்டபோது சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது.

"முதல்வரை நீக்க வேண்டும், பிராந்திய கட்சி வேண்டும்" - மணிப்பூர் இளைஞர்களின் கோரிக்கை நிராகரிப்பு !

அதனைத் தொடர்ந்து அங்கு காணாமல் போன 20 வயது மாணவனும், அவரின் தோழியான 17 வயது மாணவியும் காட்டில் இறந்த நிலையில் கிடக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஜாம் ஹெம்ஜித் என்ற மாணவரும்,அவரின் தோழியான ஹிஜாம் லிந்தோயிங்காம்பி என்பவரும் கடந்த ஜூலை 6-ம் தேதி காணாமல் போயுள்ளனர்.

அப்படி காணாமல் போனவர்களின் சடலங்கள் கிடக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இருவரும் ஆயுதமேந்திய குழுவிடம் சிக்கியிருக்கும் புகைப்படம் முதலில் வெளியான நிலையில், பின்னர் அவர்கள் காட்டின் நடுவில் இறந்துகிடக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு பல்வேறு இடங்களில் மீண்டும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.இந்த வழக்கில், சம்மந்தப்பட்ட 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 4 பேரை சிபிஐ போலிஸார் கைது செய்தனர்.

"முதல்வரை நீக்க வேண்டும், பிராந்திய கட்சி வேண்டும்" - மணிப்பூர் இளைஞர்களின் கோரிக்கை நிராகரிப்பு !

இந்த நிலையில், மணிப்பூர் முதலமைச்சரை மாற்றவேண்டும், அங்கு பிராந்திய கட்சி உருவாக்கவேண்டும் என மணிப்பூர் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லி சென்றுள்ள மணிப்பூர் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் டெல்லியில் உள்ள மணிப்பூர் இளைஞர்களுடன், ஒரு சந்திப்பை நடத்தினர்.

இந்த சந்திப்பின் போது, மணிப்பூரில் பிராந்தியக் கட்சியை உருவாக்க வேண்டும் என்றும், முதல்வர் என் பிரேன் சிங்கை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கையை எழுப்பினர். துப்பாக்கிச் சூட்டைத் தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பினர்.

ஆனால், இளைஞர்களின் இந்த கோரிக்கையை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கொண்டு குழு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சுமார் 20 பாஜக எம்.எல்.ஏக்கள் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்குக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மாணவர்களின் இந்த கோரிக்கையை புறக்கணித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories