அரசியல்

"நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்" - இஸ்லாமிய மாணவர்களை திட்டிய ஆசிரியை.. கர்நாடகாவில் அதிர்ச்சி !

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் எனக் கூறிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்" - இஸ்லாமிய மாணவர்களை திட்டிய ஆசிரியை.. கர்நாடகாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரபிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்னர் பள்ளி ஒன்றில் ஆசிரியரே இந்து மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவனை தாக்கச் சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து வெளியான வீடியோவில், இஸ்லாமிய மாணவர் ஒருவர் நிற்கிறார். அந்த மாணவரை அடிக்குமாறு ஆசிரியர் திருப்தா தியாகி என்பவர் கூறியவுடன் முதலில் ஒருவர் அந்த மாணவரை அடிக்கிறார். அதன்பின்னர் அடுத்தடுத்து பிற மாணவர்கள் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மாணவர்கள் மத்தியில் வெறுப்பைப் பரப்பும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் அதே போன்ற சம்பவம் கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் உருது கல்வி நிறுவனம் நடத்தும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இந்து மாணவர்களும், இஸ்லாமிய மாணவர்களும் படித்து வந்துள்ளனர். இந்த சூழலில் 5-ம் வகுப்புக்கு கன்னட பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவர் இரண்டு இஸ்லாமிய மாணவர்களை மாணவர்களை நோக்கி 'இது இந்துக்களின் நாடு. 2 பேரும் பாகிஸ்தான் செல்லுங்கள் என கூறியுள்ளார்.

Urdu Government Higher Primary School
Urdu Government Higher Primary School

Urdu Government Higher Primary Schoolஇந்த சம்பவம் குறித்த அந்த மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி புகைரளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அந்த ஆசிரியை மீது துறைரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கர்நாடகாவில் கடந்த முறை ஆட்சியில் இருந்த பாஜகவின் காலத்தில் இந்துத்துவ கருத்துகள் அதிகளவில் பரப்பப்பட்ட நிலையில், அதன் வெளிப்பாடாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories