அரசியல்

ஜனநாயகம், நீதி, சுதந்திரம் ஆகியவற்றுக்கு இப்போது என்ன பொருள்? - ஒன்றிய அரசை விமர்சித்த பிரதமரின் ஆலோசகர்

ஜனநாயகம், நீதி, சுதந்திரம் ஆகியவற்றுக்கு  இப்போது என்ன பொருள்? - ஒன்றிய அரசை விமர்சித்த பிரதமரின் ஆலோசகர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றிய அரசின் பொருளாதார விவகாரங்கள் குறித்து பிரதமருக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தனி அதிகாரம் படைத்த பொருளாதார ஆலோசனை கவுன்சில் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக விவேக் தேப்ராய் (Bibek Debroy) பொறுப்பு வகித்து வருகிறார்.

இவர் எழுதிய செய்திக் கட்டுரை ஒன்று, ஆங்கில நாளிதழ் வாயிலாக கடந்த 14ல் வெளியானது. அதில், 'நாம் விவாதிக்கும் பெரும்பாலான விஷயங்களில் சில திருத்தங்களை தவிர, பெரும்பாலானவை அரசியலமைப்பில் துவங்கி முடிவடைகின்றன.

'அதன் முன்னுரையில் சில உள்ள சமதர்மவாதி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் போன்ற வார்த்தைகளுக்கு இப்போது என்ன பொருள் என்பதை கேட்க வேண்டும். 'மக்களாகிய நமக்கென்று நாம் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயகம், நீதி, சுதந்திரம் ஆகியவற்றுக்கு  இப்போது என்ன பொருள்? - ஒன்றிய அரசை விமர்சித்த பிரதமரின் ஆலோசகர்

ஒன்றிய அரசை விமர்சிக்கும் விதமாக இந்த கட்டுரை வெளியாகி இருப்பதால், 'இதற்கும் பொருளாதார ஆலோசனை கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு நேரடி சம்பந்தம் இல்லை. இவை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து' என, கவுன்சில் தரப்பு விளக்கம் அளித்து உள்ளது.மத்திய அரசின்பொருளாதார விவகாரங்கள் குறித்து பிரதமருக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தனிபடைத்த அதிகாரம் பொருளாதார ஆலோசனை கவுன்சில் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக விவேக் தேப்ராய் பொறுப்பு வகித்து வருகிறார்.

இவர் எழுதிய செய்திக் கட்டுரை ஒன்று, ஆங்கில நாளிதழ் வாயிலாக கடந்த 14ல் வெளியானது. அதில், 'நாம் விவாதிக்கும் பெரும்பாலான விஷயங்களில் சில திருத்தங்களை தவிர, பெரும்பாலானவை அரசியலமைப்பில் துவங்கி முடிவடைகின்றன.

ஜனநாயகம், நீதி, சுதந்திரம் ஆகியவற்றுக்கு  இப்போது என்ன பொருள்? - ஒன்றிய அரசை விமர்சித்த பிரதமரின் ஆலோசகர்

'அதன் முன்னுரையில் உள்ள சமதர்மவாதி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் போன்ற வார்த்தைகளுக்கு இப்போது என்ன பொருள் என்பதை கேட்க வேண்டும். 'மக்களாகிய நாம் நமக்கென்று புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசை விமர்சிக்கும் விதமாக இந்த கட்டுரை வெளியாகி இருப்பதால், 'இதற்கும் பொருளாதார ஆலோசனை கவுன்சில் மற்றும் ஒன்றிய அரசுக்கு நேரடி சம்பந்தம் இல்லை. இவை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து' என, கவுன்சில் தரப்பு விளக்கம் அளித்து உள்ளது.

banner

Related Stories

Related Stories