அசாம் மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜகவின் கிசான் மோர்ச்சா என்ற விவசாய அணியின் பொருளாளராக இந்திராணி தஹ்பில்தார் (Indrani Tahbildar) என்ற 48 வயது பெண் இருந்து வருகிறார். மேலும் இவர் பாஜக வணிகப் பிரிவின் துணைத் தலைவர் பதவியிலும் இருக்கிறார்.
இந்த சூழலில் இவர் தனது மற்றோரு வீட்டை பாஜக தலைவர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். மேலும் அந்த தலைவருடன் இவர் நெருக்கமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கெளஹாத்தியில் இருக்கும் இவர் அம்மாநிலத்தில் பாஜகவில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படுகிறார். இவருக்கு திருமணமான பிறகும் மற்றொரு பாஜக தலைவருடன் நெருக்கமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இந்திராணியும், அந்த பாஜக தலைவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அண்மையில் இணையத்தில் வைரலானது. இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்த இந்திராணி, நேற்று கெளகாதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலை குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அப்போது அந்தரங்க புகைப்படம் வெளியானதால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனிடையே இவருடன் தொடர்பில் இருந்த அந்த பாஜக தலைவர் தலைமறைவானார். தற்போது தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாஜக ஆளும் மாநிலமான அசாமில் பாஜக தலைவருடன் பெண் பாஜக நிர்வாகி ஒருவர் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியானதால் மன உழைச்சளில் இருந்த அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!