அரசியல்

”பா.ஜ.கவின் கோழைத்தனமான நடவடிக்கை”.. அமலாக்கத்துறை சோதனைக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்!

எதிர்கட்சிகளை மிரட்டி, பிரிப்பதற்கு மோடி எழுதும் வழக்கமான திரைக்கதை தான் அமலாக்கத்துறை சோதனை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

”பா.ஜ.கவின் கோழைத்தனமான நடவடிக்கை”.. அமலாக்கத்துறை சோதனைக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொது பொன்முடிக்கு எதிரான புனைய்ப்பட்டவழக்கில், 13 ஆண்டுகள் கழித்து தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.

மேலும் இன்றும் நாளையும் பெங்களூருவில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது. இதற்கு முன்பு பாட்னாவில் நடந்த கூட்டத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி விட்டில் சோதனை நடைபெற்றது.

தற்போது நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெங்களூரு செல்வதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," பீகாரிலும், தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் பிஜேபி-யை வீழ்த்துவதற்காக தொடர்ந்து கூட்டப்படக்கூடிய கூட்டம் இது. பிஜேபி ஆட்சிக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனுடைய வெளிப்பாடுதான் இது. அமலாக்கத்துறை இன்றைக்கு அவர்களால் ஏவப்பட்டு, ஏற்கனவே வடமாநிலப் பகுதிகளில் அந்தப் பணிகளை செய்து கொண்டிருந்தவர்கள், தற்போது தமிழ்நாட்டிலும், அந்தப் பணியை தொடங்கி இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமலாக்கத்துறை சோதக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எதிர்கட்சிகளை மிரட்டி, பிரிப்பதற்கு மோடி எழுதும் வழக்கமான திரைக்கதை இது.

பா.ஜ.கவும் திடுதிப்பென தனக்கு ஆதரவான ஓர் அணி கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. மோடி அரசாங்கத்தின் பழி வாங்கும் அரசியலுக்கு எதிராக ஒரே சிந்தனை கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்திருக்கிறோம்.

ஜனநாயகத்தை குலைக்க முயலும் கோழைத்தனமான நடவடிக்கைகள் எங்களை சிக்க வைக்க முடியாது. கல்வி அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நடத்தப்படும் அமலாக்கத்துறை ரெய்டுகளுக்கு கண்டனம் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ”அனைவரையும் அமலாக்கத்துறை கொண்டு பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். கட்சிகளை உடைக்க முயலுகிறர்கள். அமலாக்கத்துறை இல்லை என்றால், தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை. பாஜகவின் பல தலைவர்களும் வெளியேறியிருப்பார்கள்.

இந்தியா போன்ற ஒரு பெரும் நாட்டை அமலாக்கத்துறை கொண்டு உங்களால் பயமுறுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இப்படி எதிர்கட்சி தலைவர்கள் பலரும் அமலாக்கத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories