அரசியல்

”ஆளுநரின் கத்துக்குட்டி அரசியல் அத்துமீறிக் கொண்டிருக்கிறது”.. முரசொலியில் சிலந்தி கடும் தாக்கு!

ஆளுநர் பதவியை குரங்கு கை பூமாலையாக்கி விட்டார் ரவி என்ற தலைப்பில் முரசொலியில் சிலந்தி கட்டுரை வெளிவந்துள்ளது.

”ஆளுநரின் கத்துக்குட்டி அரசியல் அத்துமீறிக் கொண்டிருக்கிறது”..  முரசொலியில் சிலந்தி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி 'ஜனநாயகம் இந்தியா - அமெரிக்காவின் மரபணுக்களில் ஊடுருவியது' என்று பேசி வந்ததின் ஈரம்கூடக் காயவில்லை! அதற்குள் ஜனநாயகப் படுகொலைக்கு வித்திட்டுள்ளார் ஆளுநர் ரவி!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டது போல; மனநிலை சீராக இல்லாதவர் செயல்பாடு போலத்தான் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் தொடர்கின்றன!

பி.ஜே.பி.யின் ஆட்சியில் இந்திய ஜனநாயகத்தின் உயிர் உலக நாடுகளால் விமர்சிக்கப்படும் அளவு. ஊசலாடிக் கொண்டிருக்கிறது! 'உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு' என்ற பெருமையை சுக்கு நூறாக்க அத்தனை நடவடிக்கைகளிலும் இறங்கி விட்டது!

அரசியல் சட்டத்தின் அரிச்சுவடியைக் கூட அறியாத ஒரு நபர் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டு - அவர் நடத்தும் 'கத்துக்குட்டி அரசியல்’ அத்துமீறிக் கொண்டிருக்கிறது!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை ஒரு வழக்கைப் பதிவு செய்து அதன்மீது நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அமலாக்கத் துறையின் வழக்கு விசாரணை நிலையில் உள்ள நிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுகிறார்!

”ஆளுநரின் கத்துக்குட்டி அரசியல் அத்துமீறிக் கொண்டிருக்கிறது”..  முரசொலியில் சிலந்தி கடும் தாக்கு!

செந்தில் பாலாஜி இப்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார். அவர்மீது வழக்கு இருப்பதாலும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாலும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக ஆளுநர் தன்னிச்சையாக அறிவித்துள்ளார்! பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையோ. முதலமைச்சரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்களையோ பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை ஆளுநருக்கு எந்த அரசியல் சட்டப்பிரிவு அளித்துள்ளது என்று ரவி விளக்க வேண்டாமா?

ஆளுநர் நினைத்தால் அமைச்சரை நீக்கலாம் என்றால். அதே நிலைதானே முதலமைச்சருக்கும்! பின் எதற்கு நாட்டில் தேர்தல். மக்கள் தேர்ந்தெடுக்கும் அவர்களது பிரதிநிதிகள்?

செந்தில்பாலாஜி குற்றம் சாட்டப்பட்டவரே தவிர அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை! ஆளுநர் ரவியின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டுள்ளவர் அமைச்சராக இருக்கக் கூடாது என்றால், நாளை ஆளுநருக்கோ, ஒன்றிய அரசுக்கோ பிடிக்காத யாரும் அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ இருக்க முடியாது, ஒரு நாலு பேரை பிடித்து, 'இந்த அமைச்சர் மீது ஒரு புகார் கொடு’ என்று கூறிவிட்டு, அந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்து, வழக்குக்கு ஒத்துழைப்புத் தரவில்லை என்று அமலாக்கத்துறையை கைதுசெய்ய வைத்து, வேண்டாதவர்கள் பதவி யைப்பறித்து விடலாமே!

இந்த நடவடிக்கைகள் ஒன்றிய அரசு விரும்பாத அரசுகள்மீது கட்ட விழ்த்து விடப்பட்டால் நாட்டின் நிலை என்ன ஆவது?

”ஆளுநரின் கத்துக்குட்டி அரசியல் அத்துமீறிக் கொண்டிருக்கிறது”..  முரசொலியில் சிலந்தி கடும் தாக்கு!

உண்மையில் பார்க்கப் போனால், இது அமைச்சர் செந்தில்பாலாஜி மீதோ, தி.மு.க. அரசுக்கு எதிராகவோ, கட்டவிழ்த்து விடப்பட்ட, நடவடிக்கை அல்ல; தமிழ்நாடு மக்கள் மீதும் அவர்களுக்கு எதிராகவும் யாரோ ஒரு தற்குறியின் அறிவுரையைக்கேட்டு தொடுத்துள்ள போர்!

அரசியல் சட்ட அறிவு சிறிதும் இல்லாத ஒரு நபர். தன்னை ஒரு ஐ.பி.எஸ். என்று கூறிக் கொள்ளும் போது, உண்மையிலேயே அந்தப் பட்டம் அவர் வாங்கியதுதானா? என்ற சந்தேகம் வலுப்பதிலும் நியாயம் இருக்கிறதல்லவா!

ஒரு ஆளுநரை வைத்து முதல்வரையோ அமைச்சர்களையோ பதவி நீக்கம் செய்யலாம் என்று, அரசியல் சட்டம் விதி வகுத்திருக்குமானால், இந்நேரம் ஒன்றிய அரசுக்கும் மோடி, அமித்ஷா கூட்டத்துக்கும் பிடிக்காத மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், பினராயி விஜயன், சித்தராமையா போன்ற முதல்வர்களின் ஆட்சியைக் கவிழ்த்து சூறையாடியிருக்காதா, ஒன்றிய பா.ஜ.க. அரசு!

அது என்ன அத்தனை சுலபமானதா என்று கேட்கலாம்! ஏன் முடியாது? அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்!

எப்போதோ கொடுத்த புகார்: அதுவும் வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்ற புகார்; அதுவும் செந்தில் பாலாஜி நேரடியாக வாங்கியதாகக் கூறப்பட்ட புகார் அல்ல; செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி வாங்கியதாகக் கூறப்பட்ட புகார்! வழக்கு என வந்ததும் வாங்கியதாகக் கூறப்பட்ட நபரே. அவரே வாங்கியதைத் திரும்பக் கொடுத்து வழக்கை முடித்துக் கொண்ட விவகாரம்! வாங்கியதாகக் கூறப்பட்ட நபர் வாங்கியதைத் திரும்பக் கொடுத்துவிட்டால் அது ஊழலில்லையா என்று கேட்டிடத் தோன்றும். உண்மைதான்!

”ஆளுநரின் கத்துக்குட்டி அரசியல் அத்துமீறிக் கொண்டிருக்கிறது”..  முரசொலியில் சிலந்தி கடும் தாக்கு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டான்சி நிலத்தை சட்டத்துக்குப் புறம்பாக வாங்கி அதனைத் திருப்பிக் கொடுத்து விட்டதால் தண்டனை இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய விவகாரங்கள் உண்டு!

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட சம்பவமோ செல்வி.ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில நடந்த விவகாரம்! ஜெயலலிதா மறைந்து ஆறு ஆண்டு காலம் ஓடி விட்டது. இந்த நிலையில் செந்தில்பாலாஜி மீது அவர் அ.தி. மு.க.வை விட்டு விலகிய மாதத்தில் வழக்கு: அதுவும் அவர் நேரடியாகச் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கு அல்ல! விசாரணை நிலையில் உள்ள இந்த வழக்கில் கைது என்றார்கள், இதை எல்லாம் பார்க்கும் படிப்பறிவில்லாத பாமரனுக்குத் தெரியும். இது பழிவாங்கும் நடடிக்கை என்று!

இந்த நிலையில் ஆளுநர் ரவி முதலமைச்சர் தளபதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறார்! "உடனடியாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று முதலமைச்சர் உரிய விளக்கம் தந்து விட்டார்! குற்றச்சாட்டு உள்ள நிலையில் ஒன்றியத்திலும், மாநிலங்களிலும் பி.ஜே.பி. உட்பட பல கட்சியினர் அமைச்சர் பதவியில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்! உடனே ரவி பதுங்கினார். இப்போது மீண்டும் பாய்ந்து. தனது அறிவிலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு பின்வாங்கியுள்ளார்.

”ஆளுநரின் கத்துக்குட்டி அரசியல் அத்துமீறிக் கொண்டிருக்கிறது”..  முரசொலியில் சிலந்தி கடும் தாக்கு!

தேர்ந்த அரசியல் வல்லுநர்கள். பத்திரிகையாளர்கள், அரசியல் சட்டம் படித்த மேதைகள் அனைவரும். "ஆளுநர் ரவியின் இந்தப் போக்கு. அரசியல் சட்டம் குறித்து அவரது அறியாமையைக் காட்டுகிறது” என்று தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்கள்.

‘சுயபுத்தி இல்லாத பேர்வழிகளுக்கு சொல்புத்தியாவது இருக்க வேண்டும்' என்பார்கள்! இரண்டும் இல்லாத இரண்டாம் கெட்டான்களை ஆளுநர்களாக நியமித்து. ஜனநாயகப் படுகொலைகள் நடத்தப்படுவதை மற்றைய ஜனநாயக நாடுகள் கண்டால் இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கும்?

வெளிநாடுகளில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகக் கருதப் டும் இந்தியாவின் ஜனநாயகத்தை ஆளுநர் ரவி போன்றோர் கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருப்பதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்!

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்ட இரண்டே கேள்விகளில் ஒன்று. இந்திய ஜனநாயகச் சீரழிவு குறித்தது. விளக்கமாகப் பதில் அளிக்க இயலாத பிரதமர் மோடி அவர்கள், அமெரிக்க ஜனாதிபதி கூறிய பதிலையொட்டி 'ஜனநாயகம் எங்கள் மரபணுவில் உள்ளது' என்றார்!

ஆளுநர் ரவியின் செயல். பிரதமரின் பதிலை வேரறுக்கவில்லையா?

"குரங்கு கை பூமாலை"என்பார்களே, ஆளுநர் ரவியையும் அவரது கையிலே சிக்கியுள்ள ஆளுநர் பதவியையும் பார்க்கும் போது நமக்கு அது தான் நினைவுக்கு வருகிறது.

Related Stories

Related Stories