அரசியல்

“உன்னை தூக்கிவிடுவேன்..” : பிரதமரை விமர்சித்த சக பயணியை மிரட்டிய பாஜக நிர்வாகி - கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரயில்வே காவல்துறைக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது.

“உன்னை தூக்கிவிடுவேன்..” : பிரதமரை விமர்சித்த சக பயணியை மிரட்டிய பாஜக நிர்வாகி - கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரயில்வே காவல்துறைக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சக பயணியர் ஒருவரை பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி “தூக்கிவிடுவேன், நான் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்” என்றெல்லாம் தொடர்ச்சியாக மிரட்டியிருக்கிறார்.

இதை சகித்துக் கொள்ள முடியாமல் சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் நாராயணன் திருப்பதியை தட்டிக்கேட்டுள்ளார். ஆனால், தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வதற்கு பதிலாக ஆளும் கட்சி என்ற அதிகாரத்தையும், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற பொறுப்பையும் தவறாக பயன்படுத்தி காவல்துறையை ஏவி விட்டு கே.சாமுவேல்ராஜை ரயில்வே போலிஸார் ரயிலில் இருந்து இறங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.

“உன்னை தூக்கிவிடுவேன்..” : பிரதமரை விமர்சித்த சக பயணியை மிரட்டிய பாஜக நிர்வாகி - கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

பாஜகவுக்கு அஞ்சி ரயில்வே போலிஸ் நடந்து கொண்ட விதம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். பொதுவாழ்க்கையில் இருக்கிற யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல; கருத்து சுதந்திரம், அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள உரிமையாகும். சொல்லப்படும் கருத்து ஏற்புடையதல்ல என்றால் பதில் கருத்து சொல்லலாம்.

அதேசமயம், அது மிரட்டலாகவும், அச்சுறுத்தலாகவும், ரவுடித்தனமாகவும் மாறுவதை அனுமதிக்கவே கூடாது. இந்நிலையில் பிரதமரை விமர்சித்தால் காவல்துறையை ஏவிவிடுவோம் என்பது பா.ஜ.க.வின் சகிப்பற்ற தன்மையையும், அதிகார மமதையுமே காட்டுகிறது.

இத்தனையும் செய்துவிட்டு கே.சாமுவேல்ராஜ் பேசியதை வெட்டியும், திரித்தும் வெளியிட்டு அவர் குற்றம் செய்து விட்டதைப் போல பொதுவெளியில் பதிவிடுவதை சி.பி.ஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது.

தென்னக ரயில்வே காவல்துறை, இச்சம்பவத்தில் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீதும், சக பயணிகளை மிரட்டிய பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories