அரசியல்

மோடியின் கொடூரம்.. ஒன்றிய அரசின் கடும் எதிர்ப்புகளையும் மீறி 2-வது பாகத்தை வெளியிட்டது BBC!

ஒன்றிய அரசின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படத்தின் 2வது பாகத்தை BBC-ஐ வெளியிட்டுள்ளது.

மோடியின் கொடூரம்.. ஒன்றிய அரசின் கடும் எதிர்ப்புகளையும் மீறி 2-வது பாகத்தை வெளியிட்டது BBC!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002–ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் சிறுபான்மையினர் மீது நடந்த திட்டமிட்ட தாக்குதல் என உலகம் முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது.

குஜராத் கலவரத்தின் போது 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை இந்துத்துவா கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்து, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கொலை செய்தது. இதனிடையே பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 11 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி குஜராத் பா.ஜ.க அரசு உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோடியின் கொடூரம்.. ஒன்றிய அரசின் கடும் எதிர்ப்புகளையும் மீறி 2-வது பாகத்தை வெளியிட்டது BBC!

இத்தகைய கொடுமையான குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்தப்படத்தில் பிரதமர் மோடியின் உண்மை முகம் அம்பலப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த ஆவணப்படத்தில் குஜராத் கலவரத்தின் போது, சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை எந்த முயற்சியையும் மேற்கொள்ளப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆவணப் படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. மேலும் கடும் எதிர்ப்பை தெரிவித்து இது தொடர்பாக விளக்கமும் கேட்டுள்ளது.

மேலும் பிபிசி வெளியிட்டுள்ள இந்த ஆவணப்படத்திற்கு தடை விதித்துள்ள ஒன்றிய அரசுக்குப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ராகுல் காந்தி, "உண்மையைத் தடுக்க முடியாது.அது எப்படியும் வெளியில் வந்தே தீரும். நீங்கள் எந்த தடை விதித்தாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

இதேபோல், பிரதமர் மோடி தொடர்பான இந்த ஆவணப்படம் இந்தியாவில் மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா போன்ற மாநிலங்களில் இந்த ஆவணப்படம் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

மோடியின் கொடூரம்.. ஒன்றிய அரசின் கடும் எதிர்ப்புகளையும் மீறி 2-வது பாகத்தை வெளியிட்டது BBC!

மேலும் ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டபோது பா.ஜ.கவின் மாணவர் அழைப்பான ஏ.பி.வி.பி அங்கிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இப்படி இந்தியாவில் பெரும் பரபரப்பாக மோடி தொடர்பான ஆவணப்படத்தின் முதல் பாகம் பேசப்பட்டு வரும் நிலையிலும், ஒன்றிய அரசின் தடையையும் மீறி 2வது பாகத்தை பிபிசி இன்று வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டாவது பாகத்தில், இரண்டாவது முறையாக மோடி பிரதமரானது, மனித உரிமை அமைப்பை முடக்கியது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற முக்கிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories