அரசியல்

"வாலாட்டியவர்கள் வாலை ஒட்ட நறுக்கிய வரலாறு திமுக-வுக்கு உண்டு.. வாய் நீளம் வேண்டாம் நட்டா?" : சிலந்தி!

ஊசியில் ஓட்டை என்று சல்லடை கேலி பேசுவதா? என்ற தலைப்பில் இன்றைய முரசொலியில் சிலந்தியின் கட்டுரை வெளிவந்துள்ளது.

"வாலாட்டியவர்கள் வாலை ஒட்ட நறுக்கிய வரலாறு திமுக-வுக்கு உண்டு.. வாய் நீளம் வேண்டாம் நட்டா?" : சிலந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு. தமிழ்நாட்டிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் பணிகளைத் துவங்கிவைக்க அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் நட்டா வந்து துவக்கி வைத்துள்ளார்.

'ஏம்பா.... ஒரு ராசியான தலைவரை அழைத்து இந்தத் துவக்கத் தைச் செய்திருக்கக் கூடாதா?... சொந்த மாநிலம் இமாச்சலப்பிரதேசத்தில், பாரதிய ஜனதா கட்சியிடமிருந்த ஆட்சியை பறிகொடுத்து, அந்த மாநிலத்தின் ஆட்சியை மீண்டும் காங்கிரஸ் வசம் ஒப்படைத்த ஒரு நபரை அழைத்து தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை துவக்கியுள்ளீர்களே; உருப்படுமா? உங்களுக்கு வேறு யாருமே கிடைக்கவில்லையா?”

- என பா.ஜ.க.விலேயே புலம்பல்கள் தொடங்கி விட்டன. ராசியில் அதீத நம்பிக்கை கொண்டுள்ள பா.ஜ.க.வினர் பலர். தங்கள் மீது இடி இறங்கியது போல எண்ணி தலையிலேகைவைத்துக் கொண்டு புலம்பிடத் தொடங்கி விட்டனர்!.

"வாலாட்டியவர்கள் வாலை ஒட்ட நறுக்கிய வரலாறு திமுக-வுக்கு உண்டு.. வாய் நீளம் வேண்டாம் நட்டா?" : சிலந்தி!

கடந்த செப்டம்பர் மாதம் தமிழ் நாட்டுக்கு வந்த நட்டா “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளன" எனப் பேசி. 'தான் முட்டாள்களின் சொர்க்கத்தின் ஏகபோக அதிபதி' என்பதைக் காட்டிச் சென்றார்! அவர் பேச்சைக் கேட்டு எதிரே அமர்ந்திருந்த மக்கள் மட்டுமின்றி மேடையில் இருந்த அந்தக் கட்சியினரே ஒருவரை ஒருவர் வெளிரிய முகத்துடன் பார்த்துக் கொண்டனர்! பா.ஜ.க.வை ஏற்க னவே தமிழ்நாட்டு மக்கள் ஏளனமாகப் பார்க்கிறார்கள்:

அந்த நிலையில். 'பேச்சு என்ற பேரில் இந்த மனிதர் ஏடாகூடமாக வெந்தும், வேகாததுமாக வாந்தி எடுக்கிறாரே' என விவரம் தெரிந்த ஓரிரு பா.ஜ.க.வினர் முகத்தைச் சுளித்துக்கொண்டனர். இப்போது மேட்டுப்பாளையத்தில் வந்து வாரிசு அரசியல் பற்றி பேசியுள்ளார். அந்தப் பேச்சைக் கேட்டபோது, இவர்களெல்லாம் உப்பு போட்டு உணவு அருந்துகிறார்களா என்ற ஐயம் எழச் செய்கிறது.

வாரிசு அரசியல் பற்றி பேசிட. பல வாரிசுகளைத் தன்னகத்தே வைத்து அரசியல் புரிந்து கொண்டிருக்கும் பி.ஜே.பி.யினருக்கு என்ன அருகதை உள்ளது என்று கேட்டருந்தோம். பி.ஜே.பி. யிலுள்ள பல முக்கிய வாரிசுகளின் பட்டியல் முரசொலியில் மட்டுமின்றி. சமூக ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. அதற்குப் பிறகும் வாரிசு அரசியலைப் பற்றி ரோஷ உணர்வு கொண்ட பி.ஜே.பி.யினர் யாராவது பேசுவார்களா?

பி.ஜே.பி.யினரின் 'புருடா'க்கள் தமிழகத்தில் போணியாகாது என்பதை நட்டா உணராதது வேடிக் கைதான்! இப்படி வாய்க்கு வந்ததை அளந்துவிடும் பேர்வழிகள் அதிகமானதால் பி.ஜே.பி. என்பது; அவர்கள் பாஷையில் கூறுவதென்றால் ‘பாரதிய ஜும்லா (வெற்று வாக்குறுதி) பார்ட்டியாகி விட்டது என ஒரு சாரரும். பாரதிய ஜோக்கர்ஸ் பார்ட்டியாகி விட்டது என ஒரு பகுதி மக்களும் உணர்ந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டுக்கு வந்து D.M.K. வுக்கு விரிவாக்கம் தந்து கொண்டிருக்கிறார் பி.ஜே.பி. தலைவர்! காற்றுக்கு எதிரே துப்பினால், அதைத் துப்பிய முகத்தை நோக்கித் தள்ளி விட்டு காற்று அதன் பணியைத் தொடர்ந்திடும் என்பதை நட்டா கூட்டம் அறிந்து கொள்ள வேண்டும்.

"வாலாட்டியவர்கள் வாலை ஒட்ட நறுக்கிய வரலாறு திமுக-வுக்கு உண்டு.. வாய் நீளம் வேண்டாம் நட்டா?" : சிலந்தி!

வாரிசு அரசியல் குறித்து நட்டா பேசுவதைப் பார்த்தால், இந்த மனிதர் சுயஅறிவோடு பேசுகிறாரா என்ற ஐயம் எழுவதில் ஆச்சரியமில்லை! நட்டாவின் சொந்த மாநிலத்தில் தேர் தல் நடந்து முடிந்த ஈரம் கூட இன்னும் காயவில்லை: அங்கே பி.ஜே.பி. சார்பில் எத்தனை வாரிசு கள் தேர்தலில் நிறுத்தி வைக்கப் பட்டனர் என்பது நட்டாவுக்கு தெரியாதா? அல்லது இமாச்சலப் பிரதேசத் தில் நடந்த விவகாரம் தமிழ்நாட்டுக்குத் தெரிந்திருக்காது என நினைத்து இங்கு வாய் நீளம் காட்டிவிட்டாரா?

இமாச்சலப்பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பி.ஜே.பி. அமைச் சராக இருந்த மகேந்தர் சிங் தாக்கரின் மகன் ராஜ்தாக்கருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப் பட்டதே, அது வாரிசு அரசியல் இல் லையா? அப்பாவும், மகனும் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்டால் அங்கே Dynasty (வாரிசு) அரசியல் ஆகாதா?

இப்படி ஓரிரு வாரிசுகளா இமாச்சலப் பிரதேச தேர்தல் களத்தில் இருந்தனர்? நட்டாவுக்கு நினைவுபடுத்த பெரும் பட்டியலில் சில பெயர்களை மட்டும் இங்கே எடுத்து வைக்க விரும்புகிறோம். பி.ஜே.பி. சார்பில் சம்பா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர், பி.ஜே.பி.யின் சட்டமன்ற உறுப்பினராகஇருந்த பாவன் நய்யாரின் மனைவி நீலம் நய்யார்.

போரஞ்சி தொகுதியில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஐ.டி. திமானின் மகன் அனில் திமான். மற்றொரு; மறைந்த அமைச்சர் ஜகதேவ்சந்த்தாகூரின் மகன் நரேந்தர் தாகூருக்கு ஹாமிர்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு. முன்னாள் பி.ஜே.பி. அமைச்சர் நரேந்திர பிரகத் மகன் சேத்தன் பிரகத். மறைந்த முன்னாள் அமைச்சர் குஞ்சலால் தாக்கூர் மகன் கோவிந்த சிங் தாக்கூருக்கு மணாலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு.

"வாலாட்டியவர்கள் வாலை ஒட்ட நறுக்கிய வரலாறு திமுக-வுக்கு உண்டு.. வாய் நீளம் வேண்டாம் நட்டா?" : சிலந்தி!

மாயா சர்மா என்பவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால்தேவ் சர்மாவின் மனைவி. அவருக்கு பி.ஜே.பி சார்பில் வேட்பாளர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுக்ராமின் மகன் அனில்சர்மா பி.ஜே.பி.யின் இன்னொரு தொகுதி வேட்பாளராக கோட்டியிட வாய்ப்பு.

இப்படி வாரிசு அரசியல் நடந்துள்ள இடம் நட்டாவின் சொந்த மாநிலத்தில். சொந்தக் கட்சியில், இந்த லட்சணத்தில்தான்:

'ஊசியில் ஓட்டை என்று சல்லடை கேலி பேசுவது போல' நட்டா இங்கு வந்து பேசியிருக் கிறார்.

அரசியலில் பா.ஜ.க.வின் தமிழ் நாட்டு தலைவர்தான் அரைக்கால் வேக்காடு என்றால். அகில இந்தியத் தலைவரோ தமிழ்நாட்டுத் தலைவரின் அரசியல் அறிவு‘வாரிசு தனது என்பது, அறிவை விட மேலானது என்று எடுத்துக்காட்டியுள்ளார். இந்த அரசியல் காலம் காலமாக தி.மு.கழகத்தின் மீது அதன் எதிரிகள் வீசி, கழகத்தின் எதிர் தாக்குதலால் துண்டு துண்டாய் போய் கிடக்கும் கத்தி! இப்போது அது கத்தியாகக் கூட அல்ல; வெறும் கைப் பிடியாகத்தான உள்ளது.

அந்த கைப்பிடியை கத்தியாகக் காட்டி மிரட்டி வாலாட்டியவர்கள் வாலை ஒட்ட நறுக்கியுள்ளது தி.மு.க! தி.மு.க. வரலாறு நட்டாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! நாம் அடிக்கடி சுட்டிக்காட்டுவது போல கழகத்தின் கடைக்கோடி தொண்டனும் தெளிந்த அரசியல் ஞானம் கொண்டவன். தமிழ் மண்ணும் திராவிட இயக்கத் தலைவர்களால் அரசியலில் பண்படுத்தப்பட்ட மண்!

இங்கே வந்து நட்டா ஆட்டம் காட்ட நினைத்து வாலாட்ட நினைத்திட வேண்டாம்! தமிழ் நாட்டு பி.ஜே.பி. யில் விபரம் தெரிந்த தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள். கத்துக்குட்டி அண்ணாமலை போன்றவர் கள் தலைவர்களாக அமர்ந்த பிறகு அவர்களில் சிலர் கமலாலயம் பக்கமே செல்ல அஞ்சுகின்றனர். ‘அங்கிருந்து கிளம்பும் 'வீடியோக்களைக் காணும் போது அங்கு என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை'. என ஜனசங்க காலத்திலிருந்தே தங்களை அந்தக் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள் பலர் கூனிக் குறுகிக் கிடக்கின்றனர்.

நாட்டிலுள்ள புண்ணிய ஸ்தலங்கள் அனைத்திலிருந் தும் புனித நீர் கொண்டு வந்து கமலாலயத்தைக் கழுவினால் கூட அதன் நாற்றம் போகுமா என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

"வாலாட்டியவர்கள் வாலை ஒட்ட நறுக்கிய வரலாறு திமுக-வுக்கு உண்டு.. வாய் நீளம் வேண்டாம் நட்டா?" : சிலந்தி!

அரசியல் கட்சிகளில் இப்படி ஒன்றிரண்டு இலை மறைவு, காய் மறைவு நிகழ்வுகள் ஏற்ப டுவது உண்டு. ஆனால் கமலாலயத்தில் இருந்து நித்தம் நித்தம் கசியும் வீடியோக்கள், ஆடியோக்கள், ஏன்; புகைப்படங்கள் இவற்றைக் காணும்போது இதற்காகவே கமலாலயம் செயல்படுகிறதோ என்று எண்ணும் வகையில் விதவிதமான ‘மீம்ஸ்'கள் சமூக வலைதளங் களில் வலம் வருகின்றன.

நட்டா அகில இந்திய பா.ஜ.க. தலைவர்! தேர்தல் பிரச்சாரம் துவங்கி நீலகிரி மலையில் தாமரையை மலரச் செய்ய முற்படுவதற்கு முன் கமலாலயத்தில் தாமரை கசங்கிக் கொண்டிருப்பதை சரி செய்ய முதலில் சில நாட்கள் ஒதுக்கிடவேண்டும். பா.ஜ.க. வின் மூத்த தலைவர்கள் பலரது விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும்; அவர்கள் சார்பில்தான் நாம் பூனைக்கு மணி கட்டியிருக்கிறோம். நட்டா செய்வாரா?

- சிலந்தி.

banner

Related Stories

Related Stories