அரசியல்

“திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழை எப்போதோ அழித்திருப்பார்கள்..” -உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.

“திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழை எப்போதோ அழித்திருப்பார்கள்..” -உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 1,114 மாணவ - மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.

“திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழை எப்போதோ அழித்திருப்பார்கள்..” -உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

பின்னர் மேடையில் பேசிய அவர், "கல்லூரியில் படிக்கும் போதே மாணவ-மாணவிகள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் முன்னேறுவதற்காகத்தான் முதலமைச்சரின் 'நான் முதல்வன்' என்ற திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் பலருக்கு வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும். அதற்கு தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.

“திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழை எப்போதோ அழித்திருப்பார்கள்..” -உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மீடியம் இல்லை என்கின்றனர். 2010-ம் ஆண்டிலேயே அப்போதைய முதல்வர் கலைஞர் கொண்டுவந்தார். தற்போது சிவில், மெக்கானிக்கல், கணினி பாடப்பிரிவுகள் தமிழ் வழி பொறியியல் படிப்புகள் உள்ளன.

பல நாடுகளிலும் சென்று பணிபுரிய ஆங்கிலமும் வேண்டும், தாய்மொழியான தமிழும் வேண்டும். தமிழ் மொழியில் பொறியியல், மருத்துவம் படிப்பது தவறில்லை. அதேநேரத்தில், ஆங்கிலத்தை புறக்கணித்துவிடக் கூடாது.

“திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழை எப்போதோ அழித்திருப்பார்கள்..” -உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழி உட்பட 2 பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு, அதுவும் தாய்மொழிக்கு ஆபத்து என்றால் முதலில் குரல் கொடுப்பது திராவிட கட்சிகள்தான். திராவிட கட்சிகள் இல்லையென்றால் என்றைக்கோ தமிழ்மொழியை அழித்திருப்பார்கள், மறைத்திருருப்பார்கள்.

தமிழகத்தில் என்றும் இருமொழிக் கொள்கைதான். பன்னாட்டு மொழியான ஆங்கிலத்துடன் தாய்மொழியான தமிழ் மொழியை படிக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இந்தியை படிக்கலாம். யாரையும் கட்டாயப்படுத்தி படிக்குமாறு கூறக்கூடாது.

“திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழை எப்போதோ அழித்திருப்பார்கள்..” -உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

இந்தியை புகுத்தி அதில் பாடத்தை படிக்க வேண்டும் என்றால், இங்கு பலருக்கும் இந்தி புரியாது. இதற்காக இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்து கற்றுக்கொடுக்க வேண்டும். நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல; இந்தியை கற்றுக்கொள்ள விருப்பப்படுவோர் இந்தியை கற்கலாம், கட்டாய பாடமாக இந்தியை படிக்க வேண்டும் என்றால் ஏற்க மாட்டோம்.

நாங்கள் புதிய கல்வி கொள்கைக்கு எதிரானவர்கள் அல்ல. ஒன்றிய அரசு புதிய கல்விக்கொள்கை திட்டத்தில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை கொண்டு வருகிறது. இந்த தேர்வு தேவையற்றது. 3-வது மொழியாக இந்தி மொழியை ஒன்றியஅரசு திணிக்கக்கூடாது. அதற்கு பதிலாக மாணவர்கள் விருப்பப்படிதேர்வு செய்யலாம்" என்றார்.

banner

Related Stories

Related Stories