அரசியல்

குஜராத்தில் ரூ.1,000 கோடி கறுப்புப் பணம் சிக்கியது - பிரதமரின் சொந்த மாநிலத்தின் லட்சணம் இதுதானா ?

குஜராத் வணிகக் குழுமத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, கணக்கில் வராத 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கறுப்புப் பணம் கண்டறியப்பட்டதாக CBDT தெரிவித்துள்ளது.

குஜராத்தில் ரூ.1,000 கோடி கறுப்புப் பணம் சிக்கியது - பிரதமரின் சொந்த மாநிலத்தின் லட்சணம் இதுதானா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த மாதம் குஜராத்தைச் சேர்ந்த வணிகக் குழுமத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, கணக்கில் வராத கறுப்புப் பணம் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கண்டறியப்பட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது!

குஜராத்தை தளமாக கொண்டு முன்னணி தொழில் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆபரணங்கள், ஜவுளி, ரசாயனம், பேக்கேஜிங், ரியல் எஸ்டேட், கல்வி என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை சந்தேகித்ததை அடுத்து அண்மையில் இந்த தொழில் குழுமத்துக்கு சொந்தமாக கெடா, ஆமதாபாத், மும்பை , ஐதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் கணக்கில் வராத கறுப்புப் பணம் ரூ. 1,000 கோடி கண்டறியப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூ. 24 கோடி, ரூ. 20 கோடி மதிப் பிலான நகைகள், தங்கக் கட்டிகள் உள்ளிட்டவை யும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

மேலும் சோதனைகளின் போது, கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் தரவுகள், அங்கு பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கு ஆதாரங்களாக அமைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், வருமான வரிச்சோதனையின்போது சிக்கிய தரவுகள், தொழில் குழும நிறுவனர்களின் சொந்த பயன்பாட்டுக்காக, கற்பனையான நிறுவனங்கள் மூலம் நிதியை மோசடி செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது என்று நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories