நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை காதில் வாங்காத ஒன்றிய அரசுக்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனங்களை இருஅவைகளிலுமே பதிவு செய்து வருகின்றனர்.
அந்தவகையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து மக்களவையில் ககோலி கோஷ் தஸ்திதார் கேள்வி எழுப்பினார். அப்போது அருகில் இருந்த அதேகட்சியைச் சேர்ந்த எம்.பி., மஹுவா மொய்த்ரா தன்னுடையை Louis Vuitton பிராண்டு கைப்பையை எடுத்து கீழே வைத்தார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறி வந்த பா.ஜ.க.வினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு, மஹுவா மொய்த்ராவை விமர்சித்து வந்தனர். மேலும் இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வையில், தனது ட்விட்டர் பக்கத்தில் மஹுவா மொய்த்ரா வெளியிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், உங்களுக்கு இவ்வளவு பணம் எங்கியிருந்து வந்தது என கேள்வி எழுப்பியவருக்கு, மோடிஜியின் 10 லட்ச மதிப்புள்ள சூட்டின் ஏலத்தில் கிடைத்த வருமானத்தில் எனக்கு சிறு தொகையை அளித்தார். அதில் இந்த ஹேண்ட் பேக்கை வாங்கினேன். மீதப் பனத்தை வக்கீல் கட்டணத்துக்குச் செலுத்திவிட்டேன்” எனத் கிண்டலடித்துள்ளார்.
அதாவது அந்த வக்கீல் கட்டணம் என்பது அமலாக்கத்துறை இயக்குநரின் சட்டவிரோத நீடிப்பை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். எனவே அதனைக் குறிப்பி்ட்டு பதிலடிக் கொடுத்துள்ளார்.