அரசியல்

பிரதமர் மோடியின் உரையின்போது காலியான நாற்காலிகள்: வாரணாசி பூத் நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

வாரணாசியில் நடந்த வாக்குச்சாவடி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி உரையாற்ற இருந்தபோது நூற்றுக்கணக்கான நாற்காலிகள் காலியாக இருந்தது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

பிரதமர் மோடியின் உரையின்போது காலியான நாற்காலிகள்: வாரணாசி பூத் நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தின் 6 மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3 மற்றும் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரை ஜோராக நடைபெற்று வருகிறது.

இப்படி இருக்கையில், வாரணாசியில் உள்ள 3,361 வாக்குச்சாவடிகளுக்கான நிர்வாகிகளை சந்திக்கும் வகையில் “பூத் விஜய் சம்மேளனம்” என்ற கூட்டம் நேற்று (பிப்.,27) நடைபெற்றது.

20,000க்கும் மேலான வாக்குச்சாவடி நிர்வாகிகள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றுவதாக இருந்தது. ஆனால் உரை தொடங்குவதற்கு அரைமணி நேரம் தாமதமானதால் நிர்வாகிகள் சோர்ந்து போயிருக்கிறார்கள்.

இதனால் வெகுநேரமாக காத்திருந்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்துச் சென்றிருக்கிறார்கள்.

இதன் காரணமாக பிரதமர் மோடி உரையாற்ற இருந்தபோது நூற்றுக்கணக்கான நாற்காலிகள் காலியாக இருந்திருக்கிறது.

இது தொடர்பாக பிரபல aaj tak செய்தியாளர்கள் கூட்டத்தில் இருந்து கிளம்பிச் சென்றவர்களிடம் விசாரித்த போது, நண்பகல் 12 மணியளவில் அனைவரும் தண்ணீர்கூட குடிக்காமல் ஆவலுடனேயே காத்திருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சி தாமதமானதால்தான் எழுந்து சென்றிருக்கிறார்கள்” எனக் கூறப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories