சென்னை அடையாறில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி உரையாற்றினார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
உங்களுக்கு ஒரு கதையுடன் உரையை தொடர்கிறேன். உங்களுக்கு தெரியும் நான் ஏன் அதிமுக பாஜகவை பற்றி பேச வந்திருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு காங்கிரசில் இருந்து ஒருவர் வெளியேறினார். பாஜகவுடன் உறவு வைத்திருப்பவர்கள் நேர்மையானவர்கள் இல்லை. தமிழகத்தில் இரண்டு சித்தாந்தம் இருக்கிறது.
தமிழகத்தை தமிழகத்தில் இருந்து ஆட்சி செய்ய வேண்டும். அந்த தமிழ்நாடு தான் வேண்டும். டெல்லியில் இருந்து ஆட்சி செய்கின்ற தமிழ்நாடு வேண்டாம். என்னை பொறுத்தவரை கீழ் மட்டத்தில் இருந்து, தமிழ்நாடு ஆட்சி செய்யப்படக் கூடாது. ஒரு பாரம்பரியத்தைக் இன்னொரு பாரம்பரியம் கூட ஒப்பிடுதல் கூடாது.
அமித்ஷாவை பொறுத்தவரை அவருடைய காலில் விழ வேண்டி அவரே சொல்லுவார். என்னிடமும் இதை சொல்லி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை தமிழ்நாடு முக்கியம், மகாராஷ்டிரா முக்கியம், மேற்கு வங்கம், அசாம், எல்லா மாநில மொழிகளும் முக்கியம். அதனால்தான் அதிமுக அமித்ஷா காலில் விழுந்து கிடக்கிறது. அமித்ஷாவின் காலடியில் விழ வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இல்லை. ஆனால், மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்துக்களை குவித்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் காலடிகளில் விழுந்து கிடக்கிறார்.
தமிழ்நாட்டின் பொருளாதார நிலை மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. வரும் காலத்தில் தமிழக மக்களை மதிக்க கூடிய அரசாக தமிழ்நாடு அரசு இருக்கும். தமிழகத்திற்கு ஒரு புதுமை தேவைப்படுகிறது. அந்த புதிய ஆட்சியில் கூட பண்பாடும் கலாச்சாரமும் கலந்து இருக்க வேண்டும். இந்திய சிந்தனைக்கு தமிழக பாரம்பரியம் முதன்மையாக இருக்கும். இந்த மண்ணுக்கு மரியாதை செலுத்த வந்தவர்கள் யாரும் மரியாதை குறைவாக சென்றது இல்லை. 3000 ஆண்டுகளாக தமிழக மக்கள் அடிமையாக இருந்தது இல்லை. தமிழக மக்களின் அன்பும் பாசமும் மரியாதையும் தவிர வேற எதுவும் தேவை இல்லை.
இந்தியா என்ற சிந்தனை தமிழகம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் பழைய பண்பாடு பாரம்பரியம் உண்டு. தமிழக பண்பாடு பற்றி தெரியும் மற்றும் தமிழ் மொழியை கற்க முயற்சி செய்கிறேன். ஜனநாயகதின் மீது ஒரு தாக்குதல் இருக்கிறது. நம்முடைய முதுகெலும்பு சிறு, குறு தொழில்கள் தான். இன்று ஒரு காரை இயக்குகிறார் என்றால் அது ஸ்ரீபெரும்புதூரில் உருவாக்கப்படுகின்றது என்று தான் அர்த்தம்.
சிறு மற்றும் குறு தொழில்கள் தான் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். நான் தமிழன் இல்லை ஆனால் நான் தமிழை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். 3 வேளாண் சட்டங்களை நடைமுறைபடுத்த நினைக்கிறார்கள் இது தான் அவர்களின் தன்மை. நான் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய நூல்களை படித்து இருக்கிறேன் ஆகையால் தமிழை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
தேர்தல் முடிவுகளை நான் சொல்கிறேன். இந்த தேர்தல் மோடி, அமித்ஷா, ஆர்.ஆர்.எஸ் ஒரு பக்கம் மக்கள் ஒரு பக்கம். தேர்தலில் அவர்கள் மக்களிடம் தவிடு பொடியாவர்கள். தமிழகத்தின் முதலமைச்சர் , மு.க.ஸ்டாலின் தான். தமிழகத்தின் மீது நடைபெறும் தாக்குதல் எப்போது நிற்கும் என்றால் பாஜக ஆர் ஆர் எஸ் டெல்லியை நோக்கி போகும்போது தான் தாக்குதல் நிற்கும். நீங்கள் என் மீதும் இந்திரா காந்தி மீதும் எங்கள் குடும்பதரின் மீதும் காட்டும் அன்புக்கு நான் கடமை பட்டு இருக்கிறேன்.