சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி தொண்டர் அணி சார்பில் தேர்தல் பிரசார பொதுகூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலத்தின் தேவை இலக்கும் நோக்கும் 234 என்ற தலைப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுகூட்டம் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் D. தேன் மொழி தலைமையில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு முன்னிலையில் சென்னை தம்புச்செட்டி தெருவில் நடைப்பெற்றது.
கூட்டத்தில் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “ஊர் பேர் தெரியாதவர் பழனிசாமி. சசிகலா வரம் கொடுத்ததால் முதல்வர் ஆனார். ஆனால் வரம் கொடுத்த சசிகலாவின் தலையில் கை வைத்தவர் இந்த எடப்பாடி பழனிசாமி.
மத்தியில் ஒரு கோமாளி மோடி மாநிலத்தில் ஒரு கோமாளி எடப்பாடி. பொருளாதாரத்தில் கைதட்டி மலர்தூவி நோய்த்தொற்றை விரட்டியவர்கள். மத்திய அரசை எதிர்த்ததால் ஜெயலலிதா ஜெயிலுக்கு போனார் தாங்களும் எதிர்த்தால் ஜெயிலுக்கு போவார்கள் என்ற பயத்தால் தான் நீட் போன்ற சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து துரோகம் செய்தவர்கள் அதிமுகவினர்” எனக் கூறினார்.
தூத்துக்குடி நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், “கடந்த10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்தங்கி இருக்கிறது. தமிழகம் வருவாயில் உபரியாக இருந்தது ஆனால் தற்போது கடனில் மூழ்கி இருக்கிறது. கடன் வாங்கியாவது டெண்டர் விட்டு கமிஷன் விட்டு சம்பாதிக்க கூடிய ஆட்சி இந்த ஆட்சி தயவு செய்து கமிஷன் கொடுக்க வேண்டாம் திமுக ஆட்சிக்கு வந்தது அது ரத்து செய்ய படும்.
கொரோனா காலத்தில் கூட அனைத்தும் பொருள் வங்கியதிலும் ஊழல் செய்தவர்கள் அதிமுகவினர். டெல்லி விவசாயிகள் போராட்டம் என்பது அடிப்படை வசதி இல்லாமல் நடைபெற்று வருகிறது. அதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று அனுப்பி வைத்தார் தலைவர் ஸ்டாலின். ஆனால் எது எப்படி போனாலும் பரவாயில்லை ஆட்சி இருந்தால் மட்டுமே போதும் என்று அதனை ஆதரித்து கொண்டு இருக்கிறது அதிமுக.
தமிழகத்தில் 2 சதவிகிதம் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர் இளைஞர்கள். இரண்டு முதலீட்டாளார்கள் மாநாடு நடத்தினர். என்ன வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தியது ஆதிமுக அரசு என்று வெள்ளை அறிக்கை கேட்டும் இதுவரை கொடுக்கவில்லை” எனக் கூறினார்.