அரசியல்

CAB2019 : RSS சாவர்கரின் இந்து நாடு கனவை நிறைவேற்றத் துடிக்கிறார் அமித்ஷா - கபில் சிபல் காட்டம் !

இந்து நாடு என்கிற தத்துவத்தை முன் வைத்த சாவர்கரின் எண்ணத்தை இந்த சட்ட மசோதா நிறைவேற்றி இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி கபில்சிபல் தெரிவித்துள்ளார்.

CAB2019 : RSS சாவர்கரின் இந்து நாடு கனவை நிறைவேற்றத் துடிக்கிறார் அமித்ஷா - கபில் சிபல் காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் முஸ்லிம் இல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் சட்டத்திருத்தம் செய்து மக்களைவயில் தாக்கல் செய்தது மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு.

எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறியும் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்நிலையில், குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைப்பெற்று வருகிறது.

விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி கபில் சிபல், காங்கிரஸ் தான் இந்தியாவை மத அடிப்படையில் பிரித்தது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியக் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.

CAB2019 : RSS சாவர்கரின் இந்து நாடு கனவை நிறைவேற்றத் துடிக்கிறார் அமித்ஷா - கபில் சிபல் காட்டம் !

தொடர்ந்து பேசிய அவர், மத அடிப்படையில் நாட்டை பிரிக்க வேண்டும் என சாவர்க்கர் தான் கூறினார்; காங்கிரஸ் அல்ல. சாவர்க்கரின் எண்ணத்தை இந்த மசோதா நிறைவேற்றி இருக்கிறது. சாவர்க்கர் மற்றும் ஜின்னா தான் இரு நாடு கோட்பாட்டில் உடன்பாடு கொண்டிருந்தனர்.

ஒருவருக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமா என முடிவு செய்வதில் மதம் ஒரு காரணியாக இருக்க முடியாது. இந்திய குடியரசை இரண்டு டைனோசர்களைக் கொண்ட ஜுராசிக் குடியரசாக மாற்ற வேண்டாம். ஒருவரின் பெயரை வைத்து அவர் இந்தியாவில் வாழத் தகுதியற்றவரா இல்லையா என்று தீர்மானிக்கும் நிலை வந்துவிட்டது எனக் கூறினார்.

மேலும், மதத் துன்புறுத்தலிலிருந்து தப்பி வருபவர்கள் அனைவரும் அகதிகள் தான், அவர்களை சட்டவிரோதமாக குடியேறியவருடன் ஒப்பிட முடியாது என எல்.கே. அத்வானி பேசியதை கபில்சிபல் மேற்கோள் காட்டி பேசினார்.

banner

Related Stories

Related Stories