அரசியல்

’பின் வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க இது கோவா இல்லை; மகாராஷ்டிரா’ : பா.ஜ.க.,வை வெறுப்பேற்றும் மராட்டியம்

மும்பை தனியார் ஓட்டலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 162 பேர் செய்தியாளர்கள் முன்னிலையில் தோன்றினார்கள்.

’பின் வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க இது கோவா இல்லை; மகாராஷ்டிரா’ : பா.ஜ.க.,வை வெறுப்பேற்றும் மராட்டியம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மகாராஷ்டிர மாநிலத்தில் திடீர் திருப்பமாக பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சிவசேனா மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் எங்களிடம் 162 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்” என மகாராஷ்டிர ஆளுநரைக் குறிப்பிட்டு அதிரடியாகப் பதிவிட்டு இருந்தார்.

’பின் வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க இது கோவா இல்லை; மகாராஷ்டிரா’ : பா.ஜ.க.,வை வெறுப்பேற்றும் மராட்டியம்

அதன்படி, மும்பை தனியார் ஓட்டலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 162 பேர் கூட்டணியின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வகையில் அவர்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் தோன்றினார்கள்.

அப்போது சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், 162 ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் தலைமையில், நான் எனது கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் என உறுதிமொழி ஏற்றனர்.

’பின் வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க இது கோவா இல்லை; மகாராஷ்டிரா’ : பா.ஜ.க.,வை வெறுப்பேற்றும் மராட்டியம்

கூட்டத்தில் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கர்நாடகா, கோவா, மணிப்பூரில் பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தார்கள்.

ஆனால், பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா அல்ல மகாராஷ்டிரா. பெரும்பான்மையை நிரூபிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது'' எனத் தெரிவித்தார்.

’பின் வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க இது கோவா இல்லை; மகாராஷ்டிரா’ : பா.ஜ.க.,வை வெறுப்பேற்றும் மராட்டியம்

பின்னர் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ''எங்களை எந்தளவுக்கு உடைக்க முயற்சிக்கிறார்களோ அந்தளவிற்கு அதிகமாக நாங்கள் ஒன்றுபடுவோம்.

நாங்கள் வெறும் 5 வருடத்திற்காக இங்கு வரவில்லை. இன்னும் பல வருடங்களுக்கு நாங்கள் மகாராஷ்டிராவை ஆட்சி செய்ய போகிறோம்'' எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிருபிக்க 145 எம்.எல்.ஏக்கள் தேவை. சிவசேனா கூட்டணிக்கு தற்போது 162 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது.

banner

Related Stories

Related Stories