அரசியல்

ஓ.பி.எஸ் நீலகிரி திடீர் விசிட் : மழை பாதிப்பை பார்ப்பதாகச் சொல்லிவிட்டு பேரனை பார்க்க சென்றாரா ?

துணை முதல்வர் ஓ.பி.எஸ் வெள்ள பாதிப்பு பணிகளை ஆய்வு செய்ய நீலகிரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு, தனியார் பள்ளியில் படிக்கும் தனது பேரனை காண சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓ.பி.எஸ் நீலகிரி திடீர் விசிட் : மழை பாதிப்பை பார்ப்பதாகச் சொல்லிவிட்டு பேரனை பார்க்க சென்றாரா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த சில நாட்களாக, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, அவலாஞ்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஓடைகள், நீர்வீழ்ச்சிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரையும் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்களின் இயழ்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது.

நிவாரணப் பணிகளில் அரசு மெத்தனம் காட்டி வருவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். பல மலை கிராமங்கள் தொடர்பு கொள்ள முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன.

நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த இரு தினங்களாக அங்கு முகாமிட்டு கட்சித் தொண்டர்களுடன் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் ஆதரவு எழுந்துள்ளது. அதேநேரம் ஆளும் அ.தி.மு.க.,வில் இருந்து இதுவரை எந்த ஒரு அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ மக்களை நேரில் சந்திக்கவோ, பாதிப்பை ஆய்வு செய்யவோ செல்லவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

ஓ.பி.எஸ் நீலகிரி திடீர் விசிட் : மழை பாதிப்பை பார்ப்பதாகச் சொல்லிவிட்டு பேரனை பார்க்க சென்றாரா ?

அதேநேரம் முதல்வர் எடப்பாடி நீலகிரி மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பா.ஜ.க தலைவர்களுடன் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் ஓ.பி ரவீந்திரநாத் இருவரும் இன்று நீலகிரிக்கு சென்று வெள்ள நிவாரணப் பணிகளை கவனிக்க உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

ஆனால், ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற கான்வெண்ட் பள்ளி ஒன்றில் படிக்கும் தனது பேரனைப் பார்க்க ஓ.பி.எஸ் அவரது மகன் சென்றிருக்கிறார்கள் என்பதே உண்மை. அதேநேரம் பெயரளவில் பாதிப்பு பணிகளை ஆய்வு செய்வதாக காட்டிக்கொள்ளவே இன்று நீலகிரி வந்துள்ளனர்.

இந்த தகவல் திடீரென சொல்லப்பட்டதால், என்ன செய்வது என்று தெரியாத அதிகாரிகளும், அ.தி.மு.க நிர்வாகிகளும் இரவோடு இரவாக கடைகளுக்குச் சென்று அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி, ஐந்து ஐந்து கிலோ பாக்கெட்டுகளாக பிரித்து, பேக் செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் எப்படியாவது ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று செயல்படும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரது செயல்பாடுகளும் பொதுமக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories