1998-ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகளாக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு ஷீலா தீட்சித் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
81 வயதான ஷீலா தீட்சித், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் மாலை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்தி : காங்கிரஸ் கட்சி தனது அன்பான மகளை இழந்துவிட்டது. 3 முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் தன்னலமின்றி பணியாற்றியவர்.
பிரதமர் நரேந்திர மோடி : ஷீலா தீட்சித்தின் மறைவால் ஆழ்ந்த வருத்தம். அன்பான மற்றும் மரியாதைக்குரிய ஆளுமையால் ஆசீர்வதிக்கப்பட்ட அவர், டெல்லியின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியவர் ஷீலா தீட்சித். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
பிரியங்கா காந்தி : ஷீலா தீட்சித் தனது முன்மாதிரியான ஆளுமைக்காகவும், டெல்லியின் வளர்ச்சிக்கு அளித்த மகத்தான பங்களிப்புக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவருடைய ஆலோசனையையும், அவருடைய புன்னகையையும், அவரது அரவணைப்பை நான் இழப்பேன்.
அரவிந்த் கெஜ்ரிவால் : திருமதி ஷீலா தீட்சித் காலமானது டெல்லிக்கு மிகப்பெரிய இழப்பு. டெல்லிக்கு அவர் செய்த பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : அவரது பதவிக்காலம் தலைநகர் டெல்லிக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தின் ஒரு காலகட்டம், அதற்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் சகாவுக்கும் எனது இரங்கல்