அரசியல்

ஆட்சியை பிடிப்பதற்காக 1000 கோடி பேரம்: அருவருக்க வைக்கும் பா.ஜ.க.,வின் உண்மை முகம் அம்பலம்

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்ப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை 1000 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்க, பா.ஜ.க குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியை பிடிப்பதற்காக 1000 கோடி பேரம்: அருவருக்க வைக்கும் பா.ஜ.க.,வின் உண்மை முகம் அம்பலம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேரிடி விழுந்தது போல் உள்ளது கர்நாடக மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் , மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருகிறது. அங்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பமே இந்த நிலைக்குக் காரணம்.

காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அரசு தொடங்கிய நாள் முதல் அரசை கவிழ்க்க வேண்டும் என பாஜகவின் எடியூரப்பா போடாத திட்டமே இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில், சமீபத்தில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட சிறிய அதிருப்தியை காற்றாடிக்காக கிடைத்த நூல் போல பயன்படுத்தி பறக்க தொடங்கியிருக்கிறது பா.ஜ.க.

ஆட்சியை பிடிப்பதற்காக 1000 கோடி பேரம்: அருவருக்க வைக்கும் பா.ஜ.க.,வின் உண்மை முகம் அம்பலம்

தென் மாநிலங்களில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பா.ஜ.க எதையும் செய்யும் என்பதற்கு கர்நாடக அரசியலே ஒரு உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒன்றிரண்டு பேர் தங்களது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க அதன் பின்னர் கூண்டாக காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். சுயேட்சை எம்.எல்.ஏக்களும் இதில் அடங்குவர். காங்கிரஸ் மட்டுமில்லாமல் ம.ஜ.த.,விலும் 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனையடுத்து, சட்டப்பேரவையில் ஆளும் கட்சியின் பலம் குறைந்ததால் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி தீர்க்கமுடியாத சிக்கலாகவே அமைந்துள்ளது. இந்த நிலையில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாததால் தற்காலிகமாக ஆட்சி காப்பாற்றி கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆட்சியை பிடிப்பதற்காக 1000 கோடி பேரம்: அருவருக்க வைக்கும் பா.ஜ.க.,வின் உண்மை முகம் அம்பலம்

இந்த நிலையில் காங்கிரஸின் உறுப்பினர்களை தங்கள் கட்சிக்கு இழுப்பதற்காக 1000 கோடி ரூபாய் வரை எடியூரப்பா குதிரை பேர பணியில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில், குதிரை பேரத்துக்காக 1000 கோடியை செலவிட முன்வந்திருக்கும் பா.ஜ.க.,வினர், இந்த தொகையில் 10% கூட மணிப்பூர், மிசோரம், சிக்கிம் மாநிலங்களின் பட்ஜெட்டுக்காக ஒதுக்குவதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆட்சியை பிடிப்பதற்காக 1000 கோடி பேரம்: அருவருக்க வைக்கும் பா.ஜ.க.,வின் உண்மை முகம் அம்பலம்

இவ்வளவு கோடி பணம் மோடி, அமித்ஷாவுக்கு எங்கிருந்து வந்துள்ளது? ஊழலில்லா ஆட்சி என செல்லுமிடமெல்லாம் கொக்கரிக்கும் பா.ஜ.க அரசுக்கு மட்டும் இது போன்ற குதிரை பேரம் எல்லாம் ஊழலாக தெரிவதில்லையா எனும் பாணியில் சாடியுள்ளது.

நேற்றைய தினம் தேசிய ஆங்கில ஊடங்களில் இந்த செய்தி பரபரப்பாக விவாதிக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்ற வேலைகளுக்குப் பெயர் போன, எடியூரப்பாவின் மூலம் இதை எப்படியாவது நிகழ்த்திவிட வேண்டும் என்று பா.ஜ.க தலைமை உறுதியாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories