அரசியல்

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆவேசம்!

சாதி ஆணவப் படுகொலையை தடுக்கக் கோரி இந்திய சட்ட ஆணையம் சமர்ப்பித்துள்ள மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம் உள்பட நாடு முழுவதும் சாதி ஆணவப் படுகொலை அரங்கேறி வருகிறது. இதனை மாநில அரசுகள் தடுக்க நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆய்வறிக்கை, ஓராண்டில் 80-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாகவும், முந்தைய 3 ஆண்டுகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இதில் தமிழகத்தில் தருமபுரியில் இளவரசன், சேலத்தில் கோகுல்ராஜ், உடுமலைப்பேட்டையில் சங்கர், ஓசூரில் நந்தீஷ் - சுவாதி தம்பதியர், தற்போது கோவை மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் - வர்ஷினி பிரியா என மற்ற மாநிலங்களைப் பின்தள்ளி தமிழகம் ஆணவப் படுகொலையில் முதலிடத்தில் உள்ளது.

இதனைக் கண்டித்து பல அமைப்புகள் குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பி தொல்.திருமாவளவன் கோரிக்கை ஒன்றை வலியுறுத்தியுள்ளார்.

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆவேசம்!

கோவை மேட்டுப்பாளையத்தில் லட்சுமி பிரியா மற்றும் கனகராஜ் ஆகியோர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கலப்புத் திருமணம் செய்ததால் ஹேமாவதி என்ற பெண் அவரது குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டுள்ளார். சூழலைப் புரிந்துகொண்டு ஆணவக் கொலைகளை தடுப்பது தொடர்பான மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories