மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணனை எதிர்த்து கன்னியாகுமரியில் தி.மு.க கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக வசந்த குமார் போட்டியிட்டு 2 லட்சத்து 661 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப்பில் ஒரு போலி செய்தி அதிகமாக பரவுகிறது. அந்த போலி செய்தி என்னவென்றால்; ” வங்கியில் மக்கள் விவசாய அடிப்படையில் வைத்திருக்கும் கடன்கள் முழுவதும் தள்ளுபடியாக இருப்பதால் அனைவரும் தங்கள் அருகாமையிலுள்ள வசந்த அன் கோ நிறுவனத்தில் வருகிற 30.05.2019க்குள் வங்கி கணக்கு பத்தகம் மற்றும் ஆதார் கார்டு போன்றவற்றை எடுத்து நேரில் சென்று படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்படிக்கு H.வசந்த குமார்.MP” என இவ்வறாக அந்த செய்தி பரவுகிரது.
இந்த பதிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி வசந்த குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “ மேற்கொண்ட செய்தி தற்பொழுது #Whatsapp மற்றும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இச்செய்தி உண்மையல்ல, பொது மக்கள் மேற்கொண்ட பொய் செய்தியை நம்ப வேண்டாம். தோல்வியின் விரக்தியில் #BJP 'னர் செய்யும் பித்தலாட்ட வேலை. இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.