அரசியல்

மண்ணைக் கவ்விய தே.மு.தி.க வேட்பாளர்கள் - அ.தி.மு.க கூட்டணிக்குள் உள்ளடியா?

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியுள்ளது.

மண்ணைக் கவ்விய தே.மு.தி.க வேட்பாளர்கள் - அ.தி.மு.க கூட்டணிக்குள் உள்ளடியா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாடுதழுவிய அளவில் பா.ஜ.க கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 39 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 37 இடங்களில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. அ.தி.மு.க கூட்டணி சார்பில் தே.மு.தி.க போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் மிக அதிக வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது தி.மு.க கூட்டணி.

6 சுற்றுகள் முடிவில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கௌதம சிகாமணி தே.மு.தி.க.,வின் எல்.கே.சுதீஷை விட 1,09,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

வடசென்னை தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி 65,103 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் 1,48,621 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரும் முன்னிலை வகிக்கிறார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 4 சுற்று முடிவில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 59,718 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியுள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் பல்வேறு பூசல்களுக்கிடையே இணைந்த தே.மு.தி.க அனைத்து இடங்களிலும் மிகக்குறைந்த வாக்குகளையே பெற்றிருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. அதேநேரம் அ.தி.மு.க தொண்டர்கள் தங்களுக்கு உள்ளடி வேலைகள் பார்த்து தோற்கடித்துவிட்டதாக தே.மு.தி.க.,வினர் புலம்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories