கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 2014 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் பெரிய குண்டுவெடிப்புகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா? அந்த அளவிற்கு இந்த ஆட்சி பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு ட்விட்டரில் ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ 2014-ல் இருந்து எந்த பெரிய குண்டுவெடிப்பு சத்தங்களும் இந்தியாவில் கேட்கவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். புல்வாமா, பதான்கோட், உரி, கட்சிரோலி என மொத்தம் 942 குண்டு வெடிப்பு தாக்குதல் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து பிரதமர் தங்கள் செவிகளைத் திறந்து கேளுங்கள்” என்று ராகுல்காந்தி பதிவு செய்துள்ளார்.
இந்த பதிலை factchecker என்கிற இணையதளத்தின் செய்தியை மேற்கோள் காட்டிதான் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அந்த இணையத் தளத்தில் 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரையில் வெடிகுண்டுத் தாக்குதலால் 451 பேர் உயிரிழந்துள்ளனர். 1,589 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று கூறிடப்பட்டுள்ளது.