உணர்வோசை

அடித்தள மக்களின் வரலாறு நம் நாட்டில் முழுமையாக எழுதப்படவில்லை : பேராசிரியர் கோ.ரகுபதி

அடித்தள மக்கள் வரலாறு பற்றி பேராசிரியர் கோ.ரகுபதி ஆற்றிய உரைச் சுருக்கம் !

அடித்தள மக்களின் வரலாறு நம் நாட்டில் முழுமையாக எழுதப்படவில்லை : பேராசிரியர் கோ.ரகுபதி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சுதந்திரப் போராட்டத்தின் மீதான ஆய்வுகள் இந்தியாவின் நிலவுடைமை அமைப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 1980 களில் அடித்தட்டு மக்களின் வரலாறு பற்றிப் பேசப்பட்டது. ஐரோப்பாவில் கீழிலிருந்து மேலாக வரலாறுகளை எழுதினார்கள். இந்த மார்க்சியர்களை கிராம்சியின் கண்ணோட்டம் ஈர்த்தது.

வரலாறு மட்டுமல்ல, இனவரைவியல் துறை, நாட்டுப்புறவியல் எனப் பல துறைகளிலும் பிராமண நால்வருணம் மூலமாக மக்கள் தோன்றியது என்பதாகத்தான் வரலாறு சொல்லப்பட்டது. அடித்தள மக்களின் வரலாற்றை நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறப் பாடல்கள் மூலமாக ஆராய ஆரம்பித்தார்கள்.

பண்டை இலக்கியத்தில் அடித்தள மக்கள் பற்றி எழுதினார்கள். பிரிட்டிஷ் காலத்திலேயே வரலாறுகள் எழுத ஆரம்பித்தார்கள். தென்னிந்தியாவில் பூர்வகுடி என்று வரலாறுகள் எழுதினார்கள். நான்கு வருணங்களுக்குள்ளிருந்துதான் வரலாறுகள் எழுந்தன.

அடித்தள மக்களின் வரலாறு நம் நாட்டில் முழுமையாக எழுதப்படவில்லை : பேராசிரியர் கோ.ரகுபதி

சமூகம் முன்னேறுவதற்காக எழுதியவர்கள் வரலாறு, 'அரசியல், பொருளாதாரம், மதம்' என்கிற கண்ணோட்டத்திலிருந்துதான் எழுதினார்கள். அடித்தள மக்கள் குறித்து முழுமையான முறையில் ஆய்வுகள் இல்லை. தனித் தனிக்கூறுகளாக எழுத ஆரம்பித்தார்கள்.

அடித்தள மக்களுக்கும், பொருள்களுக்கும், அடித்தள மக்களுக்கும் அறிவியலுக்குமான உறவுகள்; அரசியல் பொருளாதாரத்தில் நலிந்தோர்கள் என்கிற விதத்தில்தான் ஆய்வுகள் இருந்தன. அன்றைய சமூகத்தில் உணவு, உடை விஷயங்களில் யார் உற்பத்தி செய்தார்கள்.

நிலத்தில் உழைப்பில் ஈடுபட்டவர்கள் பள்ளர், பறையர், மற்றும் இடைநிலை சாதிகள். உழு கருவிகள் கொடுத்தோர் யார்? தோல்பையை (கமலையில் பயன்படுத்தும் தொண்டான்) யார் கொடுத்தது? இறந்துபோன விலங்குகளைப் புதைப்பவர்கள் தோலை எடுத்துக் கொள்ளலாம். செம்மான் என்பவர்கள் கமலை இறைக்கும் தோல்பை (தொண்டான்) செய்தார்கள். தோல் கருவிகள் செய்தவர்கள் பாணர், செம்மான் என்றழைக்கப்பட்டனர். மண்ணைத் தோண்டுவதற்கு, பாறைகளை உடைப்பதற்கு புலைச்சி, தாம்பளத்தி ஆகியோர் வெடி உப்பு முதலான பொருள்களைத் தயாரிப்பவர்கள்.

அடித்தள மக்களின் வரலாறு நம் நாட்டில் முழுமையாக எழுதப்படவில்லை : பேராசிரியர் கோ.ரகுபதி

உடைகளை யார் உற்பத்தி செய்தது? பட்டு நூற்பாளர் இருந்தனர். துணி வெளுப்பவர் (வண்ணார்) உவர் மண்ணை வைத்து வெள்ளாவி செய்தார்கள்.

இருப்பிடம் யார் அமைத்தார்கள்?. கல், சுண்ணாம்பு, களிமண், கூரை, ஓடுகள் ஆகிய பொருள்களைப் பயன்படுத்தி பறையர், தொண்டைமான் ஆகியோர் தொழிலில் ஈடுபட்டனர். சுண்ணாம்பு சூளை முதலியவற்றில் மீனவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். தச்சர்கள் உழைப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தேவையான எல்லாப் பொருள்களையும் கொடுத்த இவர்களைத்தான் தீண்டத்தகாதவர்கள் என்கிறார்கள். மருத்துவச்சி, அம்பட்டர், நாவிதர் ஆகியோர் மூலிகை மருத்துவம், அறுவை சிகிச்சை ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் அறிவியலோடு பிணைந்தவர்கள்

நிலவுடைமையாளர்கள் நிலம் மட்டும். உடையவர்களாக இருந்தார்கள். நீசர்கள், இழிபிறவிகள், தீட்டுகள் என்ற கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. வேதங்களில் அறிவியல் எதுவுமில்லை. நிலம் எப்படிக் கிடைத்தது? அன்றைய மன்னர்கள் அல்லது ஆளும் வர்க்கங்களால் நிலம் தாரை வார்க்கப்பட்டது. வரிச் சலுகையோடு கூடிய நிலம் வழங்கப்பட்டது.

அடித்தள மக்களின் வரலாறு நம் நாட்டில் முழுமையாக எழுதப்படவில்லை : பேராசிரியர் கோ.ரகுபதி
பேராசிரியர் கோ.ரகுபதி

ஆங்கிலேயர் வந்த பிறகு தனது நிர்வாக முறையில் நவீன தொழில் புகுத்தப்பட்டது. அதிகாரப் பொறுப்புகள் வழங்கப்பட்டவர்கள் மேட்டுக்குடி ஆனார்கள். அதுநாள் வரை மருத்துவம் பார்த்தவர்கள் அடித்தட்டு மக்கள் என்பதால் மருத்துவம் தீட்டாகப் பார்க்கப்பட்டது. அந்தத் ‘தீட்டுத்தொழிலில்” இன்று அவர்கள் இல்லை. இப்போது அவர்கள் மருத்துவர்கள் ஆக முடியாது. கலை உற்பத்தியோடு பின்னிப் பிணைந்தது மாந்திரீகம்.

வர்க்கம் தோன்றாத, அரசு தோன்றாத, சமூக ஏற்பாட்டில் பறையர், வண்ணார், கணியன், வள்ளுவர் ஆகியோர் மேஜிக் தெரிந்தவர்களாக இருந்தார்கள். அந்தக் கலை பாரம்பரிய அறிவாகப் பபோற்றப்படவில்லை. அவர்கள் குல அறிவை மற்றவர்கள் எடுத்துக் கொண்டார்கள். வெறும் கூலிகளாக மாற்றப்பட்டார்கள். நாயாடி கேரள சமூகம் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டார்கள். அடித்தள மக்களின் வரலாறு இப்படியொரு முழுமையான பார்வையில் முழுதாக இன்னும் எழுதப்படவில்லை.

நன்றி : நா.வே.அருள், த.மு.எ.க.ச, மத்திய சென்னை.

banner

Related Stories

Related Stories