முரசொலி தலையங்கம்

வெப்ப அலைகள் குறித்து ஐ.நா-வின் பகிரங்க எச்சரிக்கை... உடனடியாக பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு!

வெப்ப அலைகள் குறித்து ஐ.நா-வின் பகிரங்க எச்சரிக்கை... உடனடியாக பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

- முரசொலி தலையங்கம்

31.10.2024

காலத்தால் செய்த அரசாணை!

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை ஒன்று காலத்தால் செய்யப்பட்ட அரசாணையாக இருக்கிறது!

வெப்ப அலையை மாநிலப் பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. வெப்ப அலை மனித உடல் நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், அரசு இதனை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை, அரசிதழில் வெளியிட்டுள்ளது.

வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்குவதற்கு மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம், வெப்ப அலை தாக்கத்தின் போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

'கால நிலை மாற்றம் தான் உலகின் முன் உள்ள மிக முக்கியமான சவால்' என்று 2822 ஆம் ஆண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டார்கள். காலநிலை மாற்ற நிர்வாகக் குழு முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கால நிலை மாற்றம் குறித்து ஆராய இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான்.

துறையின் பெயரை "சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை" என்று முதலமைச்சர் அறிவித்தார். தமிழகத்திற்கான காலநிலை திட்டத்தை அறிவித்தார். தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழகத்தின் காடுகளின் பரப்பளவை 21 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' என்ற பெரும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக இந்த அரசாணை வெளியாகி உள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் வாட்டியது. வெப்ப அலை மேலாண்மை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக நல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் ஆகியவற்றில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

மருத்துவமனைகளில் போதுமான அளவு ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 1,838 தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டன. ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், 'வெப்ப அலை வீச்சை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்க இருக்கிறோம்' என்று குறிப்பிட்டார்.

வெப்ப அலைகள் குறித்து ஐ.நா-வின் பகிரங்க எச்சரிக்கை... உடனடியாக பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு!

இதைத் தொடர்ந்து மாநில வருவாய் நிர்வாக ஆணையர், தமிழ்நாடு அரசுக்கு கருத்துரு ஒன்றை அனுப்பி இருந்தார். "தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 16 நகரங்களில் வெப்ப நிலை 48 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக கரூரில் 44 டிகிரி, வேலூரில் 43.7 டிகிரி, ஈரோட்டில் 43.6 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி உள்ளது.

இதனால் முதியோர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், திறந்த வெளியில் வேலை செய்வோர், தொழிலாளிகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு வெயில் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவிக்க வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

அக்டோபர் 7 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப் படையின் 92 ஆவது ஆண்டுவிழாவில் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டவர்கள் வெப்ப அலை காரணமாக மயக்கமடைந்ததைப் பார்த்தோம். கடந்த ஜூன் மாதம் மெக்கா சென்றிருந்தவர்கள் கடுமையான வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட செய்திகளையும் படித்தோம். 2023 ஆம் ஆண்டு கோடை மாதத்தில் மட்டும் 733 பேர் வெயிலின் தாக்கத்தால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் பணியில் இருந்த 33 அலுவலர்கள் இறந்தது குறித்த செய்தியும் வெளியானது. எனவே இதை எல்லாம் மனதில் வைத்து இந்த அரசாணையை தொலை நோக்குப் பார்வையுடன் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 5-வது பெருநகரமாக உள்ளது சென்னை.கடந்த 28 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் விரைவான நகரமயமாக்கலுக்கு ஏற்ப இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பல்வேறு சவால்களை சமாளிக்கும் வகையிலும் காலநிலைக்கான செயல்திட்டத்தை தயாரிக்கும் (48 நகரங்களுக்கான கூட்டமைப்பில் சென்னை மாநகராட்சி இணைந்துள்ளது. அந்தளவு முன்னெச்சரிக்கையாக அரசு செயல்பட்டு வருகிறது.

வெப்ப உயர்வு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை ஐ.நா. காலநிலை மாற்றத்துக்கான குழு (ஐ.பி.சி.சி.) கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி விடுத்து இருந்தது. "உலக மக்கள் தொகையில் 78 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள். வெப்ப அலைகள் (Heat wave) போன்ற தீவிர வானிலையை நகரங்கள் அதிகம் சந்திக்கும். காற்று மாசுபாடு அதிகரிக்கும். போக்குவரத்து, நீர், சுகாதாரம் ஆகியவை பாதிக்கப்படும். இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆசிய நாடுகளில் வறட்சி நிலை 5 முதல் 28 சதவிகிதம் வரை அதிகரிக்கும்" என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, அரசுடன் இணைந்து மக்களும் செயல்பட வேண்டிய காலம் இது. மண்ணையும் காப்போம், மக்களையும் காப்போம்!

banner

Related Stories

Related Stories