முரசொலி தலையங்கம்

எந்நாளும் மக்களைப் பாதுகாக்கும் அரசு : முன்கள வீரராய் வலம் வரும் துணை முதலமைச்சர்!

முன்கள வீரராய் வலம் வந்து வருகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி.

எந்நாளும் மக்களைப் பாதுகாக்கும் அரசு : முன்கள வீரராய் வலம் வரும் துணை முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (16 -10 -2024)

பருவத்தே காக்கும் அரசு !

பருவ மழை பெய்யப் போகிறது. அதை முன்கூட்டியே உணர்ந்து பருவத்தே காக்கும் அரசாக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு செயல்பட்டு வருகிறது.

நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் முன்கூட்டியே உணர்ந்து திட்டமிடுதல்களைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு. அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்தார் முதலமைச்சர் அவர்கள். அனை வரையும் ஒரே சிந்தனையில் செயல்பட முடுக்கி விட்டார். இதுதான் முதல் நடவடிக்கையாகும். இது போன்ற காலங்களில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவ- தன் மூலமாக மட்டும்தான் எத்தகையச் சூழலையும் எதிர்கொள்ள முடியும். அதேபோல், இது ஒரு குறிப்பிட்ட துறையின் பணியாக மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த அரசின் பணியாகக் கருத வேண்டும் என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உணர்த்தினார்கள்.

மழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களும் தயார் என்று சொல்லத்தக்க வகையில் நிர்வாகக் கட்டமைப்பு தயார் நிலையில் இருக்கிறது. அனைத்துப் பொருட்களும் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உதவி எண்-கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பொதுமக்களுக்கான செயலியை முதலமைச்சர் அவர்கள் அறிமுகம் செய்திருந்தார்கள்.

அமைச்சர்களும், மாவட்ட நிர்வாகமும் இப்பணிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. இப்பணிகளைக் கவனிக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் மாவட்டங்களுக்குச் சென்று அனைத்-துப் பணிகளையும் முடுக்கிவிட்டுக் கண்காணித்தார்கள். நீர் செல்லும், நீர் வெளியேறும் வழித்தடங்கள் அனைத்தையும் சரிபார்க்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை ஆகிய களப்பணியாளர்கள் முன்கூட்டியே பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் மீட்புப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவைகளையும் பறக்கும் ரயில் சேவைகளையும் அதிகரிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை சொல்லப்பட்டுள்ளது.

எந்நாளும் மக்களைப் பாதுகாக்கும் அரசு : முன்கள வீரராய் வலம் வரும் துணை முதலமைச்சர்!

பொதுமக்களை தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் ஆகியவை போதுமான அளவுக்கு இருப்பில் உள்ளது. மருத்துவ வசதிகள் முழுமையாக உள்ளன. மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் முதற்கொண்டு தயாராக இருக்கிறது. காய்ச்சல் தடுப்பு முகாம்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்ட முதலமைச்சர் அவர்கள், தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்தார். எந்தச் சூழலிலும் எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்ற நிலைமை இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். அதேநேரத்தில் பொருட்களின் விலை கூடிவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். ஆவின் பால் தடையின்றி கிடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிகளுக்குத் தேவையான நீர் இறைப்பான்கள், மர அறுப்பான்கள் JCB இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கிறது.

மழை, வெள்ளத்தில் இருந்து மக்களைக் காக்கும் திட்டமிடுதல்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்து காட்டினார் என்றால், இவை அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் நேரில் சென்று கண்காணித்து வருகிறார். சென்னை மாநகரில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து செப்டம்பர் மாதத்திலேயே பல்வேறு நாட்களில் ஆய்வு செய்தார்.

சென்னை எழிலகத்தில் இயங்கும் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் ஆய்வு ( அக்டோபர் 4), சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட முன்னேற்பாட்டு பணிகள் ஆய்வு ( அக்டோபர் 5), முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு ( அக்டோபர் 8), ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு, பக்கிங்காம் கால்வாய் முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிடுதல், சென்னை அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் ஆய்வு (அக்டோபர் 13), முதலமைச்சர் அவர்கள் ஒருங்கிணைத்த கூட்டத்தில் பங்கேற்பு (அக்டோபர் 14) என மழைக்காலப் பணிகளையே நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறார் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள். முன்கள வீரராய் வலம் வந்து வருகிறார் துணை முதலமைச்சர் அவர்கள்.

மழைக்காலத்தில் மக்களைக் காப்பது அரசின் பணி மட்டுமல்ல, கழகத்தின் பணி என்பதையும் உணர்ந்த முதலமைச்சர் அவர்கள், "பருவ மழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட கழக நிர்வாகிகள் அனைவரும் தயார் நிலையில் இருக்கவும்” என்று தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

எந்நாளும் மக்கள் அரசாக, மக்களைப் பாதுகாக்கும் அரசாக, மக்களைக் காக்கும் அரணாக தி.மு.க.வை வழிநடத்தும் தலைமையாக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.

banner

Related Stories

Related Stories