முரசொலி தலையங்கம்

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் போதைப் பொருள் விற்கும் அளவு பாதுகாப்பான மாநிலம்தான் குஜராத் : முரசொலி தாக்கு !

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் போதைப் பொருள் விற்கும் அளவு பாதுகாப்பான மாநிலம்தான் குஜராத் : முரசொலி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (31.7.2024)

போதை இல்லாத குஜராத்

"போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்" என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார். போதைப் பொருள் இல்லாத குஜராத்தை அவர் முதலில் உருவாக்க வேண்டும். அங்கிருந்துதான் அதிகமான போதைப் பொருள்கள் வெளியில் வருகின்றன என்பது பிரதமருக்குத் தெரியாதா? வானொலியில் மாதம்தோறும் 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சி மூலமாகப் பேசி வருகிறார் பிரதமர். கடந்த 28 ஆம் தேதியன்று பேசும் போது, நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளார் பிரதமர்.

போதைப் பொருள் பிரச்சினை தொடர்பாக மக்களுக்கு ஆலோசனைகள் சொல்ல, 'மனஸ்' என்ற உதவி மையம் தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளார் பிரதமர். "போதைப் பொருட்களின் பிடியில் தங்கள் குழந்தைகள் சிக்கி விடு வார்களோ என ஒவ்வொரு குடும்பமும் கவலையில் உள்ளது. எனவே இந்தியாவைப் போதைப் பொருட்கள் இல்லா நாடாக உருவாக்க ஒவ்வொரு தனிநபரும் நிறுவனங்களும் அனைத்து அமைப்புகளும் உழைக்க வேண்டும். போதைப் பொருட்கள் இல்லா இந்தியாவை உருவாக்க 'மனஸ்' உதவி மையத்தை பயன்படுத்துமாறு மக்கள் அனைவரையும் அனைத்து குடும்பங்களையும், அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று பிரதமர் பேசி இருக்கிறார்.

அவரது முன்னெடுப்பு சரியானதுதான். இதனை முதலில் அவர் குஜராத்துக்கும் குஜராத் மாநில அரசுக்கும்தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் போதைப் பொருள் கிடங்காக இருப்பது குஜராத் மாநிலம்தான். தடுப்புப் பணிகளை முதலில் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும். இன்னும் சொன்னால் நாட்டிலேயே அதிகமான போதைப் பொருள் விற்பனையாகும் மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள்தான் என்கிறது ஒரு புள்ளிவிபரம். கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மாநிலங்களவையில் வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் ராஜஸ்தானில்தான் அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது பா.ஜ.க. ஆளும் மாநிலம் ஆகும். ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட், மணிப்பூர், குஜராத், அரியானா, பீகார், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் ஆகிய பத்து மாநிலங்க- ளில்தான் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஏழு மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும், ஆளும் கூட்டணியில் இருக்கும் மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இருந்து தனது போதை ஒழிப்பை பிரதமர் தொடங்க வேண்டும்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் போதைப் பொருள் விற்கும் அளவு பாதுகாப்பான மாநிலம்தான் குஜராத் : முரசொலி தாக்கு !

இந்தியாவில் போதைப் பொருள் கடத்தலின் தலைநகராக இருப்பது குஜராத் மாநிலம்தான் என்பதை அங்கிருந்து வரும் செய்திகள் தொடர்ந்து மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.ஹெராயினுக்கு முக்கிய மூலப்பொருளாக ஓபியம் உள்ளது. உலகின் மிகப்பெரிய ஓபியம் உற்பத்தியாளர்களால் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குஜராத் வழியாக வருகிறது. ஆப்கானிஸ்தானில் தயாராகும் ஹெராயின்கள், இந்தியப் பெருங்கடல் வழியாக கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவுக்குக் கடத்தப்படுவதாக ஐ.நா.வின் போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் கூறுகிறது. 2017-21 ஆகிய ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் குஜராத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

• குஜராத் மாநில கடற்பகுதியில், ஒரு கப்பலில் இருந்து 1,500 கிலோ ஹெராயினை இந்- திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் 2017 ஆம் ஆண்டு கைப்பற்றினார்கள். இந்த ஹெராயின் மதிப்பு கிட்டத்தட்ட 550 மில்லியன் டாலர் இருக்கும் என கடலோரக் காவல்படை அறிக்கையே வெளியிட்டது. "இவ்வளவு போதைப் பொருள்கள் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை” என்று கடற்படை செய்தி தொடர்பாளர் டி.கே.சர்மா சொன்னார்.

• 2021 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள முந்திரா துறைமுகத்துக்கு ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் வந்து இறங்கியது. 2022 ஆம் ஆண்டு கஞ்சா, மெத்தாம்பிடமைன் மற்றும் ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் 760 கிலோ கண்டுபிடிக்கப்பட்டன. இதன் சர்வதேச மார்க்கெட் விலை ரூ.2,000 கோடி. 2022,23 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் உள்ள 25 மாவட்டங்களில் இருந்து ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்திருப்பதாக அந்த மாநில அரசே சொல்லி இருக்கிறது.

* கடந்த பிப்ரவரி மாதம் குஜராத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3,300 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் இவை. ஐந்து பேரைக் கைது செய்தது காவல்துறை. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்து போதைப் பொருள் விற்கும் அளவுக்கு 'பாதுகாப்பான' மாநிலமாக குஜராத் இருக்கிறது.

குஜராத் போலீஸ் அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், "போதைப் பொருட்கள் குஜராத் வந்ததும் டெல்லி, பஞ்சாப் மாநிலத்துக்கு கடத்தப்படுகிறது. குஜராத்தில் இருந்து ரயில், பேருந்து,கார் மூலம் கடத்தப்படுகிறது" என்று சொல்லி இருக்கிறார். குஜராத்துக்கு போதைப் பொருள் வரும் பாதையையும், அங்கிருந்து வெளியில் அனுப்பி வைக்கப்படும் பாதையையும் முதலில் அடையுங்கள். போதைத் தடுப்பின் முதல் நடவடிக்கையாக அது அமையட்டும்.

banner

Related Stories

Related Stories