முரசொலி தலையங்கம்

“பா.ஜ.க. கூட்டணியின் கற்பனைக் குதிரையை காற்றில் பறக்கவிட்ட தி.மு.க கூட்டணி” - முரசொலி !

“பா.ஜ.க. கூட்டணியின் கற்பனைக் குதிரையை காற்றில் பறக்கவிட்ட தி.மு.க கூட்டணி” - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

'வெற்றி' விக்கிரவாண்டி!

விக்கிரவாண்டி தொகுதி, இப்போது 'வெற்றி' விக்கிரவாண்டியாக அமைந்திருக்கிறது. எதிர்கொண்ட தேர்தல்கள் அனைத்திலும் வெற்றியை மட்டுமே படைத்து வரும் வெற்றியின் நாயகனாக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திகழ்கிறார்கள்.

நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர் என்று போற்றப்பட்டவர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். அதைப்போலவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு, எதிர்கொண்ட தேர்தல் எல்லாம் வெற்றியைப் பெற்றுத் தந்த தலைவராக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.

2019 - நாடாளுமன்றத் தேர்தல்

2019 - சட்டமன்ற இடைத்தேர்தல்

2019 - 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்

2021 - ஊரக உள்ளாட்சித் தேர்தல்

2021 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

2022 - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

2023 - ஈரோடு இடைத்தேர்தல்

2024 - நாடாளுமன்றத் தேர்தல்

2024 - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - என எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்து வெற்றியின் நாயகராக காட்சி அளிக்கிறார் மாண்புமிகு தலைவர் அவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகம் பெற்றுள்ள வெற்றி என்பது சாதாரண வெற்றயல்ல. 1 லட்சத்து 95 ஆயிரம் வாக்குகள் பதிவானது என்றால் அதில் 1 லட்சத்து 24 ஆயிரம் வாக்குகள் உதயசூரியனுக்கு கிடைத்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை தி.மு.க. பெற்றுள்ளது. எதிர்த்துப் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் வைப்புத் தொகை பறிபோனது. தனக்கு அடுத்ததாக வந்த பா.ம.க. வேட்பாளரை விட 67 ஆயிரத்து 575 வாக்குகளை தி.மு.க. வேட்பாளர் அதிகமாகப் பெற்றுள்ளார். இன்னும் சொன்னால் பா.ம.க. மொத்தமாக வாங்கிய வாக்குகள் 56 ஆயிரம்தான். ஆனால் பா.ம.க.வை விட தி.மு.க. வாங்கிய வாக்குகளின் வித்தியாசம் என்பது 67 ஆயிரம் ஆகும்.

“பா.ஜ.க. கூட்டணியின் கற்பனைக் குதிரையை காற்றில் பறக்கவிட்ட தி.மு.க கூட்டணி” - முரசொலி !

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி, 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தலில் 67 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது தி.மு.க. அதனால்தான் இதனை மாபெரும் மகத்தான வெற்றி என்று சொல்ல வேண்டியதாக உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் மூன்றாண்டு காலச் சாதனைகளுக்குக் கிடைத்த வெற்றி' என்று விக்கிரவாண்டித் தேர்தல் பொறுப்பாளரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான மாண்புமிகு அமைச்சர் பொன்முடி அவர்கள் சொல்லி இருப்பதுதான் முழு உண்மையாகும். தினந்தோறும் திட்டங்களைத் தீட்டித் தரும் முதலமைச்சரின் சாதனைகளுக்கு மக்கள் தரும் நன்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியைப் பார்க்க வேண்டும். விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலை தி.மு.க. ஆட்சிக்கான எடைத் தேர்தலாக' மாற்ற நினைத்தது பா.ஜ.க. கூட்டணி. 2026 ஆம் ஆண்டு மாற்றத்துக்கு இது அடித்தளம் அமைக்கும்' என்று கற்பனைக் குதிரையை காற்றில் பறக்கவிட்டது அந்த அணி. காற்று பிடுங்கப்பட்ட பலூனாக ஆனது பா.ஜ.க. கூட்டணி.

தி.மு.க. தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் எதிரணியினரின் முகத்தை மிகச் சரியாக உடைத்திருந்தார்கள். "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக ஆற்றமிகு உடன்பிறப்பு அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தோம். நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அ.தி.மு.க., விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது. பா.ஜ.க., தனது அணியில் இருக்கும் பா.ம.க.வை உள்ளே தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்தது. 'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பா.ம.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை” என்று மிகச் சரியாகப் படம் பிடித்திருந்தார் முதல்வர் அவர்கள்.

- தேர்தல் தேதியை அறிவித்ததும் வேட்பாளரை அறிவித்தது தி.மு.க.

- தேர்தலைப் புறக்கணித்தது அ.தி.மு.க.

- பா.ஜ.க. சார்பில் ஒருவரை நிறுத்தப் போவதாக செய்தி வந்தது. ஆனால் புறமுதுகிட்டு ஓடியது பா.ஜ.க.

- பா.ம.க. தலையில் இந்தத் தொகுதியைக் கட்டியது பா.ஜ.க.

தொடர் தோல்விகளில் இருந்து மீள்வதற்கான பிடிமானம் விக்கிரவாண்டியிலாவது கிடைக்குமா என்று பார்த்தது பா.ம.க. இறுதியில் பா.ம.க.வின் தோல்விச் சரித்திரமே தொடர்கிறது.

“பா.ஜ.க. கூட்டணியின் கற்பனைக் குதிரையை காற்றில் பறக்கவிட்ட தி.மு.க கூட்டணி” - முரசொலி !

என்னென்னவோ எல்லாம் பேசினார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பை ஒரு தேர்தல் உத்தியாக பா.ம.க. பயன்படுத்தியது. சாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். "சட்டப்படி ஒன்றிய அரசுதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த முடியும். சில புள்ளி விபரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது என்பதால் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்துவதுதான் முறையாக இருக்கும்” என்று முதலமைச்சர் தெளிவாகச் சொல்லி இருந்தார்கள்.

"இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அந்தக் கூட்டணியோடு பேசி சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துங்கள்" என்று பா.ம.க. உறுப்பினர்களுக்கு சட்டமன்றத்திலேயே வேண்டுகோள் வைத்தார் முதலமைச்சர் அவர்கள், பா.ஜ.க.விடம் பேசுவதற்கு தைரியம் இல்லாத பா.ம.க., விக்கிரவாண்டியில் பொய்ப் பரப்புரையைச் செய்தது. சமூகநீதிக்கு துரோகமானவர்களோடு கூட்டணி சேர்ந்து கொண்டு சமுகநீதி நாடகத்தை பா.ம.க. நடத்தியது. சிறுபான்மையினர், இலங்கைத் தமிழர் குடியுரிமையைப் பறித்த குடியுரிமைச் சட்டத்துக்கு மாநிலங்களவையில் வாக்களித்த கட்சிதான் பா.ம.க. இத்தகைய துரோக வரலாற்றை அறிந்தவர்கள்தான் நாங்கள் என்பதை மக்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியப்படுத்திவிட்டார்கள் விக்கிரவாண்டி களத்தில்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னதைப் போல, "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை” என்பதை விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் சொல்லி விட்டார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் 'சாதனைகள்' தொடர்வதைப் போலவே, 'வெற்றி'யும் தொடர்கிறது.

banner

Related Stories

Related Stories