முரசொலி தலையங்கம்

“மணிப்பூர் வன்முறையாளர்களை விட, ஆபத்தானவர்கள் பத்ரியின் உரிமை காப்பாளர்கள்” : முரசொலி கடும் சாடல்!

இங்கே பேச்சுரிமையைப் பயன்படுத்துவதிலும் 'வர்ண' அடுக்கு இருக்கிறது! தண்டனை தருவதில் கூட 'வர்ண' அடிப்படை இருந்த நாடு தானே இது!

“மணிப்பூர் வன்முறையாளர்களை விட, ஆபத்தானவர்கள் பத்ரியின் உரிமை காப்பாளர்கள்” : முரசொலி கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பழங்குடி உயிரைப் பறிப்போம்.. பத்ரி உரிமையைக் காப்போம்..

இரண்டு மாதங்களைக் கடந்தும் எரிகிறது மணிப்பூர். அரசியல் அறுவடைக்காக மதவெறியைத் தூண்டிய பா.ஜ.க.வின் மாநில அரசும் ஒன்றிய பா.ஜ.க. அரசும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன. இதற்கு எதிராக லேசான கோபத்தை உச்சநீதிமன்றம் காட்டியதும், ஒரு பதிப்பக உரிமையாளரான பத்ரி சேஷாத்ரி என்பவர், உச்சநீதிமன்ற நீதிபதி கையில் துப்பாக்கியுடன் போக வேண்டியதுதானே என்று கொந்தளிக்கிறார்.

'பழங்குடியின மக்களை அசிங்கப்படுத்திப் பேசுகிறார். நீதிமன்ற அவமதிப்பைவிட, வன்கொடுமையான பேச்சு அவரது பேச்சு. அத்தகைய மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற, சனாதனச் சங்கியை கைது செய்ததும் மனித உரிமை என்ற பெயரால் சிலர் கிளம்புகிறார்கள். சிலர் பாதிக்கப்படும் போது மட்டும் மனித உரிமையாளர்கள் 'வானத்தில் இருந்து குதித்துவிடுவார்கள்.' கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே அல்லவா?!

“மணிப்பூர் வன்முறையாளர்களை விட, ஆபத்தானவர்கள் பத்ரியின் உரிமை காப்பாளர்கள்” : முரசொலி கடும் சாடல்!

ரத்த வெறி தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது மணிப்பூரில். இரண்டு பெண்கள் ஆடைகள் களையப்பட்டு இழுத்து வரும் காட்சி என்பது இந்த மெத்தப்படித்த மேதைகள் காலம் காலமாகச் சொல்லி வரும் பூசனைப் பெண்களின் வடிவங்கள் அல்லவா? அதன் பிறகும் கொழுப்பு வாயில் வடிகிறது என்றால், அதனையும் ஆதரிப்போம் என்றால், இங்கு சனாதனம் புத்திஜீவிகளுக்குள் போய் சங்கமம் ஆகி இருக்கிறது என்றல்லவா அர்த்தம்?

'ஒருவர் அறிவாளி என்பதன் பொருள், அவர் அந்தச் சமூகத்துக்கு, வாழும் காலத்தில் என்ன மாதிரியான தொண்டாற்றுகிறார் என்பதைப் பொறுத்தது' என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆடைகள் களைந்து இழுத்து வரப்பட்ட இரு பெண்களும் 'தி வயர்' இதழுக்கு அளித்த பேட்டியை எழுத்தாளர் தீபலட்சுமி மொழி பெயர்த்திருக்கிறார்.

''என் பெயர் நான்சி. 29 வயது. மே 4 அன்று என் கணவரும் மாமியாரும் கொல்லப்பட்டார்கள். திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகி இருந்தன. என் பெயர் கிம், 20 வயது. மணிப்பூர் இன அழிப்பில் தப்பியவர். என் அம்மா மற்றும் சகோதரர் பட்டப்பகலில் நடந்த படுகொலையை நேரில் கண்டவர். பெற்றோர் இருவரும் அரசுப்பணியில். தந்தை காவல்துறையில் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் இது நடந்த போது அவர் உடனில்லை. இன்று வரை அப்பாவைச் சந்திக்கவும் முடியவில்லை.

“மணிப்பூர் வன்முறையாளர்களை விட, ஆபத்தானவர்கள் பத்ரியின் உரிமை காப்பாளர்கள்” : முரசொலி கடும் சாடல்!

கலவரம் தொடங்கியது முதலே உறவினர்கள் எல்லாரும் ஒரே வீட்டில் கூடிக் கூடியே இருந்தோம். மே 4 அன்று எங்கள் இம்பால் வீட்டிலிருந்து எங்கள் சொந்த ஊருக்குப் போவதற்குப் பாதுகாப்பு கிடைப்பதாகக் கேள்விப்பட்டு துணிமணிகள் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பிய போது கும்பல் ஒன்று எங்களை நோக்கி வந்தது. நீங்கள் குக்கிகளா என்று கத்தியது. நாங்கள் மிஜோக்கள் என்றோம். குக்கி, மிஜோ எல்லாம் ஒன்றுதான் என்று கூறி எங்களைக் காரில் இருந்து வெளியே இழுத்தனர். காரை அடித்து நொறுக்கிய பின்பு கெரசின் ஊற்றிக் கொளுத்தினார்கள்.

என் அண்ணனை அடிக்கத் தொடங்கினர். நாங்கள் தடுக்க முயன்றோம். எங்கள் மீதும் அடி விழுந்தது. அந்தக் கும்பலில் ஒருவர் எங்களை அங்கிருந்த கடைக்குப் பின்னால் ஒரு வீட்டில் ஒளிந்து கொள்ளச் சொன்னார். நானும் அண்ணியும் அங்கு சென்று ஒளிந்து கொண்டு 112 எண்ணை அழைத்த போது அதனை யாரும் எடுக்கவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் நாங்கள் அங்கு இருப்பதை அறிந்து வந்த கும்பல் கல்லால் வீட்டை அடிக்கத் தொடங்கியது. கதவை இரும்புக் கம்பிகள் கொண்டு அடித்து உடைக்கப் பார்த்தது. நாங்கள் கதவை அடைத்துத் தடுத்து நின்றோம். இரும்புக்கழிகளின் அடி எங்கள் மீது விழுந்து இரத்தம் வழியத் தொடங்கியது.

“மணிப்பூர் வன்முறையாளர்களை விட, ஆபத்தானவர்கள் பத்ரியின் உரிமை காப்பாளர்கள்” : முரசொலி கடும் சாடல்!

பின்பு எங்களை ஒருவரிடமிருந்து ஒருவர் பிரித்துவிட்டார்கள். என் முடியைப் பிடித்து இழுத்து மெயின் ரோட்டுக்கு அழைத்து வந்தார்கள். மொத்த நேரமும் கம்புகளால் அடித்தார்கள் . ரோட்டில் அண்ணன் குருதி வழிய அமர்ந்திருந்தான். அவனிடம் ஓடிய போது அருகில் எனது அத்தை தனது ஒரு வயதுக் குழந்தையுடன் இருந்தார். அந்தக் குழந்தையையும் அடித்தார்கள்.

மெய்ரா பெய்பிக்கள் எவ்வளவு கெஞ்சினாலும் விடாமல் என்னை அடித்து, வயிற்றில் குத்தி, என் ஆடைகளையும் கிழித்தனர். சாலை ஓரத்தில் அமர வைத்து என்னை நோக்கிக் கத்தினார்கள். மெய்த்தி ஆண்களை நோக்கி, நான் உரிமை கொடுக்கிறேன், இவளை வன்புணர்வு செய்யுங்கள் என்று என்னைக் காண்பித்துச் சொன்னார். நான் அதிர்ச்சியடைந்து அழத்தொடங்கினேன்.

பிறகு அங்கிருந்த மெய்தி சமூகக்கூடத்துக்கு நடந்து போகச் சொன்னார்கள். நான் மெதுவாக நடந்து போனேன். உடல் முழுவதும் காயங்களின் வலி, நடக்கவே முடியவில்லை. அங்கு நுழையும் முன்பு என் ஆடைகளைக் கழற்றினார்கள். வீடியோவில் பார்த்திருப்பீர்கள். வயதான ஆண், பெண், எல்லாரும் இருந்தார்கள். அவர்கள் என்னை வசைபாடினார்கள். கும்பலில் இருந்தவர்கள் என்னைத் தொடர்ந்து அடித்தார்கள், உதைத்தார்கள்.

“மணிப்பூர் வன்முறையாளர்களை விட, ஆபத்தானவர்கள் பத்ரியின் உரிமை காப்பாளர்கள்” : முரசொலி கடும் சாடல்!

சமூகக் கூடத்துக்கு வந்த பிறகு திரும்பியும் புறப்பட்ட இடத்துக்கே நடந்து போகச் சொன்னார்கள். நான் திரும்பி மெதுவாக நடக்கத் தொடங்கினேன். அப்போது டி.சி. அலுவலகம் வழியில் இருந்தது. அங்கே செக்யூரிட்டி காவலர்கள் இருந்ததைப் பார்த்து அவர்களிடம் என்னைக் காப்பாற்றச் சொல்லிக் கேட்கலாம் என்று நின்றேன். எனக்கு உதவி செய்தால் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். ஆகவே அவர்களும் உதவிக்கு வரவில்லை. அப்போது கும்பலில் இருந்த ஆண்களும் மெய்ரா பெய்பிக்களும் தடி கொண்டு தலையிலடித்தனர். எனக்கு மயக்கம் வந்து கீழே விழுந்தேன். இரண்டாவது முறை அடித்த போது நினைவிழந்து விட்டேன்" – என்று சொல்லி இருக்கிறார்கள் அந்தப் பெண்கள்.

இதைப் படித்த பிறகும் பத்ரியின் உரிமையைக் காப்பதுதான் முக்கியம் என்றால் பத்ரியின் உரிமை நிச்சயம் காக்கப்படத் தான் வேண்டும். ஆடை களைந்து இழுத்து வந்தவர்களை விட ஆபத்தானவர்கள் இந்த உரிமை காப்பாளர்கள்!

''எல்லாம் மரத்துப் போனதொரு மனநிலையில் இருக்கிறோம். இரவில் தூங்கவே முடியவில்லை. கண்ணை மூடினால் கொலைவெறிக் கும்பல் துரத்துவது போலக் கனவுகள் வருகின்றன. அதை நினைத்தாலே உடல் நடுங்குகிறது" என்கிறார்கள் அந்தப் பெண்கள்.

இதைப் படித்த பிறகும் பத்ரியின் வலது சாரிப் பேச்சுரிமையைக் காப்பதுதான் முக்கியம் என்றால் பத்ரியின் உரிமை நிச்சயம் காக்கப்படத்தான் வேண்டும். ஏனென்றால் இங்கே பேச்சுரிமையைப் பயன்படுத்துவதிலும் 'வர்ண' அடுக்கு இருக்கிறது! தண்டனை தருவதில் கூட 'வர்ண' அடிப்படை இருந்த நாடு தானே இது!

banner

Related Stories

Related Stories